84

பத்துப்பாட்டு

பாம்பணந் தன்ன வோங்கிரு மறுப்பின்
மாயோண் முன்கை யாய்தொடி கடுக்குங
15கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவி
னாய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்நாடையன்
கேள்வி போகிய நீள்விசித் தொடையன்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
20வணங்குமெய்ந் நின்ற வமைவரு காட்சி
யாறலை கள்வர் படைவிட வருளின்
மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை
வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி
25யறல்போற் கூந்தற் பிறைபோற் றிருநுதற்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்க
ணிலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்ப்
பலவுறு முத்திற் பழிதீர் வெண்பன்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
30பூங்குழை யூசற் பொறைசால் காதி
னாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தி

14 - 5. "நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக், குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவு" (பெரும்பாண். 12 - 3); "தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவு" (மலைபடு. 21)

19 - 20. "மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்தி.......குற்ற நீங்கிய யாழ்." (சிலப். 7 : 2 - 4)

21. (பி-ம்.) ‘படையிட'

23. "வார்தல் வடித்த லுந்த லுறழ்தல்" (சிலப்.7 : கட்டுரை, 12)

16 - 24. "ஆய்தினை யவைய லனையவா நரம்பாங் கணிபெறவாரியும் வடித்தும், ஏயுற முறையே யுந்தியு முறழ்ந்து மியைந்தநீ ரோடு நன் மொழிக, டேய்வற வெடுத்துச் சிதறியும் பல்காற் றேனுற ழின்னிசை யெழுப்பி" (இலிங்க. நாரதர்கூகை. 24)

29 - 30. "மயிரெறிகத்தரிகை யனையவாய்" (சீவக. 168); "மயிரெறி கருவி வள்ளை" (கந்த. மாயைப், 46); "மயிரெறி கருவிதனதிழி தொழிலை மதித்துமஞ் சிகனுறை தூங்க" (ஆனைக்கா. அகிலாண்ட. 38)