2 - பொருநராற்றுப்படை | னாடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை நெடுவரை மிசைய காந்தண் மெல்விரற கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகி | 35 | ரணங்கென வுருத்த சுணங்கணி யாகத் தீர்க்கிடை போகா வேரிள வனமுலை நீர்ப்பெயர்ச் சுழியி னிறைந்த கொப்பூ ழுண்டென வுணரா வுயவு நடுவின் வண்டிருப் பன்ன பல்கா ழல்கு | 40 | லிரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற் பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப |
32. அரிமயிர் முன்கை : "அரிமயிர்த் திரண்முன்கை, வாலிழை மடமங்கையர்" (புறநா. 11 : 1 - 2) 33. காந்தள் மெல் விரல் : "முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்" (குறுந். 167 : 1) 34. உகிருக்குக் கிளிமூக்கு : "கிளிவா யன்ன வொளிவா யுகிரின்", "கிள்ளை வாயி னன்ன வள்ளுகிர்" (பெருங். 2. 15 : 76, 4, 7 : 42) 35. "இடையீர் போகா விளமுலை யாளை" (தே. திருவோத்தூர், 2); "ஈர்க்கிடை போகா விளமுலை மாதர்" (திருவா. போற்றி. 34); "ஈர்க்கிடை புகாம லடிபரந் தோங்கு மேரிள வனமுலை" (நைடதம், சுயம்வரப். 77) 35 - 6. சுணங்கணி யாகத்து .......... முலை : "சுணங்கணி வனமுலை" (கலித். 60 : 1) 37. "புனற்சுழி யலைத்துப் பொருந்திய கொப்பூழ்" (பெருங். 2. 15: 68) 39. "வரியல்குல் வண்டிருப் பன்ன தகைத்து" (யா. வி. சூ. 84, மேற். ‘கல்லின் மேல்') "பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல்" (சீவக. 1996, ந.) என்பதற்கு இது மேற்கோள்) 40. யானைத்துதிக்கை மகளிர் துடைக்கு: "இரும்பிடித் தடக்கையிற் செறிந்த சேர்ந்துடன் றிரண்ட, குறங்கின்" (சிறுபாண். 19 - 20); "சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து, மென்மையி னியன்று செம்மைய வாகி, நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்" (பெருங். 3.5 : 12 - 4) ; "கரிக்கைக் கவான்" (யா. கா. க - றை. 14) ; "மால்யானைக் கைபோலக், கொல்லத் திரண்ட குறங்கினாள்" (விக்கிரம. உலா)
|