86

பத்துப்பாட்டு

வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
யரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
45மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்கு
ணன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி
பாடின பாணிக் கேற்ப நாடொறுங்
களிறு வழங்கதர்க் கானத் தல்கி
50யிலையின் மராத்த வெவ்வந் தாங்கி
வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாண

42. "உயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ, வயங்கிழை யுலறியவடி" (சிறுபாண். 17 - 8) ; "மதந்தபு ஞமலி நாவி னன்ன, துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடி" (மலைபடு. 42 - 3); "முயல்வேட் டெழுந்த முடுகுவிசைக் கதநாய், நன்னாப் புரையுஞ் சீறடி" (நற். 252 : 10 - 11) ; "நாய் நாச் சீறடி" (சீவக. 2694); "இளைப்புறுஞமலி நலத்தகு நாவிற், செம்மையு மென்மையுஞ் சிறந்துவனப் பெய்தி............ உறூஉஞ் சேவடி" (பெருங். 2. 19 : 176 - 85) ; "வருந்துநாய்நாவி னணிகொள் சீறடி", "வருந்துநாய் நாவி னன்ன மலரடி" (கூர்ம. இராமன் வனம் 15, இராமன் வைகுந்த. 28) "வருந்து நாயினது நாவினை வாட்டித், திருந்து வெண்மையெழில் சேர்ந்த மலர்த்தாள்" (இலிங்க. அம்பரீடனை. 37)

43. "அரக்குவிரித் தன்ன செந்நிலம்" (மலைபடு. 507); "அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்டு" (பதிற். 30 : 27); "அரக்கத்தன்ன செந்நிலப் பெருவழி" (அகநா. 14 : 1)

45. "அடுமரன் மொக்குளில்" (நற். 278 : 2) ; "மரற்பல் பழம்போன்று கொப்புள்" (சீவக. 2339)

44 - 5. இஃது இடத்திற்கு ஏற்ற உவமைக்கு மேற்கோள்; இ. வி. சூ. 639, உரை.

47. முருகு. 205-ஆம் அடி உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க. செய்யுட்கண் பல தொகையும் விராய்வந்து ஒரு சொல் நடையவாதற்கு இது மேற்கோள் ; தொல். எச்ச. சூ. 24, ந.

49. குறுந். 329 : 3.

50 - 51. "கனையெரி நிகழ்ந்த யிலையி லங்காட், டுழைப்புறத்தன்ன புள்ளி நீழல், அசைஇய பொழுதில்" (அகநா. 379 : 19 - 21)

52. நற். 189 : 2-4.