87

2 - பொருநராற்றுப்படை

முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
55யரசவை யிருந்த தோற்றம் போலப்
பாடல் பற்றிய பயனுடை யெழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிந
வறியா மையி னெறிதிரிந் தொராஅ
தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே
60போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந
வாடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி யேழின் கிழவ
பழுமர முள்ளிய பறவையின் யானுமவ
65னிழுமென் சும்மை யிடனுடை வரைப்பி

54. "முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்" (பெரும்பாண். 33 ; புறநா. 35 : 4) ; "முரசுமுழங்கு தானை யரசொடு வேண்டினும்" (பெருங். 4. 13 : 227) 

தொல். கிளவி. சூ. 33, சே. ந. உரை, மேற்.

54 - 5. முரசடுத்தற்கு மேற்கோள் ; தொல். புறத். சூ. 31, ந.

54 - 7. இவை சிறப்புப்பற்றி வந்த உவமத்திற்கு மேற்கோள் ;தொல். உவம. சூ. 4, இளம். ந ; இ - வி. சூ. 639.

59. "பொழுதெதிர்ந்த, புள்ளினிர் மன்ற வெற்றாக் குறுதலின்" (மலைபடு. 65 - 6)

61. ஒருபொருட்பன்மொழிக்கு இவ்வடி மேற்கோள் ; நன். சூ. 397, மயிலை ; நன் - வி. சூ. 398.

64. "பழுமரந் தேரும் பறவை போல" (பெரும்பாண். 20) ; "பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல" (மதுரைக். 576) ; "தாஅ வஞ்சிறை நொப்பறைவாவல், பழுமரம் படரும்" (குறுந். 172 : 1 - 2); "யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந்தன்ன" (புறநா. 173 : 3) ; "மாக்களாற், புட்பியல் பழுமரப் பொலிவிற்று", "பார்கெழு பழுமரப் பறவை" (சீவக. 93, 828) ; "மரஞ்சேர் பறவையும், தொக்குடனீண்டிச் சூழ்ந்தன விடாஅ, பழுமரத் தீண்டிய பறவையினெழூஉம்" (மணி. 14 : 24 - 6); "கனிவளங் கவர்ந்து பதிவயிற் பெயரும், பனியிறை வாவற் படர்ச்சி யேய்ப்ப" (பெருங். 2. 8 : 119 - 20); "பாய தொன்மரப் பறவைபோல்"(திருவிளை. திருநகரப். 67)