2 - பொருநராற்றுப்படை | முருகற் சீற்றத் துருகெழு குருசி றாய்வயிற் றிருந்து தாய மெய்தி யெய்யாத் தெவ்வ ரேவல் கேட்பச் செய்யார் தேஎந் தெருமரல் கலிப்பப் | 135 | பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப் பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன் னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப வாளி நன்மா னணங்குடைக் குருளை | 140 | மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேனெத் தலைக்கோள் வேட்டங் களிறட்டா அங் கிரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை யரவாய் வேம்பி னங்குழைத் தெரியலு |
131. மு : "முருகற் சீற்றத் துருகெழு குருசில்" (புறநா. 16 : 12); "முருகி னன்ன சீற்றத்து" (அகநா. 158 : 16) 132. "உருகெழு தாய மூழி னெய்தி" (பட்டினப். 227) 134. உரிச்சொல் வகைக்கு மேற்கோள் ; தொல். கிளவி. சூ. 1, கல். 137. தவழ் கற்றல் : "கரியவன் றவழ்கற்றனன்" (பாகவதம், 10. சகடமுதைத்த. 11) (பி-ம்.) ‘கற்றது தொட்டுஞ் சிறந்த' 140. "மீளி மொய்ம்பின்" (பெருங். 5 : 3 : 44) 139-42. "ஆளி நன்மா னணங்குடை யொருத்தல், மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, வேந்தல் வெண்கோடு வாங்கிக் குருகருந்தும்" (அகநா. 381 : 1 - 3); "வேண்டார் பெரியர் விறல்வேலோன் றானிளையன், பூண்டான் பொழில்காவ லென்றுரையா - மீண்டு, மருளன்மின் கோள் கருது மால்வரை யாளிக், குருளையுங் கொல்களிற்றின் கோடு" (பு. வெ. 245) என்பது இவ்வடிகளின் கருத்தோடு ஒப்பு நோக்கத்தக்கது. கலிங்க. 237, பார்க்க. சிங்கக்குருளை களிற்றையடல் : "சிங்கமொரு கன்றீனும், பாவனை போ லேயெழுதிப் பக்கத்தில் - ஓவியமாக், காரானை யொன்றெழுதிக் காட்டவரிக் கன்றுதுள்ளிப், போராடிப் பாய்ந்தகதை பொய்யலவே" (விறலிவிடு. 203 - 4) 144. "அரவாய்க் கடிப்பகை" (மணி. 7 : 73);"அரநிக ரிலை நிம்பத்தார்" (திருவிளை. அன்னக்குழியும். 21); (புறநா. 76 : 4 ; 79 : 2)
|