2 - பொருநராற்றுப்படை | சுறவழங்கு மிரும்பௌவத் திறவருந்திய வினநாரை | 205 | பூம்புன்னைச் சினைச்சேப்பி னோங்குதிரை யொலிவெரீஇத் தீம்பெண்ணை மடற்சேப்பவுங் கோட்டெங்கின் குலைவாழைக் கொழுங்காந்தன் மலர்நாகத்துத் | 210 | துடிக்குடிஞைக் குடிப்பாக்கத் தியாழ்வண்டின் கொளைக்கேற்பக் கலவம்விரித்த மடமஞ்ஞை நிலவெக்கர்ப் பலபெயரத் தேனெய்யொடு கிழங்குமாறியோர் | 215 | மீனெய்யொடு நறவுமறுகவுந் தீங்கரும்போ டவல்வகுத்தோர் மான்குறையொடு மதுமறுகவுங் குறிஞ்சி பரதவர் பாட நெய்த னறும்பூங் கண்ணி குறவர் சூடக் | 220 | கானவர் மருதம் பாட வகவர் நீனிற முல்லைப் பஃறிணை நுவலக் கானக்கோழி கதிர்குத்த மனைக்கோழி தினைக்கவர |
210. "விரலூன்று படுக ணாகுளி கடுப்பக், குடிஞை யிரட்டு நெடுமலை" (மலைபடு. 140 - 41); "உருமிடி மகுளியிற் பொருடெரிந் திசைக்கும், கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்" (அகநா. 19 : 4 - 5); "கடுந்துடி, புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோ டிரட்டு மலை", "அந்தக் குடிஞைத் துடிமரு டீங்குரல்" (புறநா. 170 : 6 - 8, 370 : 6) 213. மணலுக்கு நிலவு : "நிலவுக் கானல்" (மதுரைக். 114); "நிலவடைந்த விருள்போல, வலையுணங்கு மணன்முன்றில்" (பட்டினப். 82 - 3); "நிலவுக்குவித் தன்ன மோட்டுமண லடைகரை", "நிலவுத்தவழ் மணற்கோடு", (நற். 159 : 4, 163:5); "நிலவுக்குவித்தன்ன வெண்மண லொருசிறை ", "நிலவுநிற வெண்மணல்" (குறுந். 123 : 2, 320 : 3); "நிலாவி னிலங்கு மணன்மலி மறுகில்" (அகநா. 200 : 1); நிலவுமணல் வியன்கானல்" (புறநா. 17 : 11); "நிலாவெழுந்த வார்மண னீடி" (திணைமாலை. 29).
|