(து - ம்,) என்பது, தலைமகன் நெடுங்காலம் வரைந்து கொள்ளாது களவின்வழி வந்து ஒழுகலும் அது பொறாது வேறுபாடெய்திய தலைமகளருகிலே தோழி சென்று 'நீ வருந்தாதே கொள்; தலைமகன் நீ வருந்துவது அறிந்தால் இதற்கு இயைந்தவாறு செய்வேன்' என்பாள், சிறைப்புறத்தானாகிய அவன் கேட்டு விரைய வரையும்படி 'மலைநாடன் தானே நயந்து வரத் தகுந்த பெருமையையுடையை யென்பதை நினது நெற்றியினழகு தராநிற்குமன்றோ' என்று சூழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதுவுமது.
துறை : (2) இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம்வேண்டு மென்றாற்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.
(து - ம்,) என்பது, வெளிப்படை.
(உரை தலைமகள் கூற்றாகக் கொள்ள இரண்டற்கும் ஒக்கும்.) (இ - ம்.) இதனை, "மறைந்தவற் காண்டல்" (தொல். கள. 20) என்னும் நூற்பாவின்கண் "அன்னவும் உள" என்பதனாற் கொள்க.
| அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்துக் |
| குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள் |
| வரியணி சிறகின் வண்டுண மலரும் |
| வாழையஞ் சிலம்பின் கேழல் கெண்டிய |
5 | நிலவரை நிவந்த பலவுறு திருமணி |
| ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி |
| களிறுபுறங் காப்பக் கன்றொடு வதியும |
் | மாமலை நாடன் நயந்தனன் வரூஉம் |
| பெருமை உடையள் என்பது |
10 | தருமோ தோழிநின் திருநுதற் கவினே. |
(சொ - ள்.) தோழி நின் திருநுதல் கவின் - தோழீ! நின் சிறப்புடைய நெற்றியின் அழகானது; அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து - அருவியொலிக்கின்ற பெரிய மூங்கில் மிக்க சாரலில்; குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் வரி அணி சிறகின் வண்டு உண மலரும் - இரத்தம் போன்ற கமழ்கின்ற காந்தளம்பூ வரிகள் பொருந்திய அழகிய சிறகையுடைய வண்டுகள் உண்ணும்படி மலராநின்ற; அம் சிலம்பில் - அழகிய சிலம்பின்