பக்கம் எண் :


674


பின் இணைப்பு
    
"நெருநலு முன்னாள் எல்லையும் ஒருசிறைப் 
    
 புதுவை யாகலிற் கிளத்தல் நாணி 
    
 நேரிறை வளைத்தோள் நின்தோழி செய்த 
    
 ஆருயிர் வருத்தங் களையா யோவென 
5
 எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை 
     
 எம்பதத் தெளியள் அல்லள் எமக்கோர் 
     
 கட்காண் கடவு ளல்லளோ பெரும 
     
 ஆய்கோன் மிளகின் அமலையங் கொழுங்கொடி 
     
 துஞ்சுபுலி வரிப்புறந் தைவரு 
10
 மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே." 

     இச் செய்யுள் தொல்காப்பியம், களவியல் 23 ஆம் நூற்பாவின்கணுள்ள "அருமையின் அகற்சியும்" என்னும் துறைக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியரால் தம் உரைக்கண் எடுத்துக்காட்டாக ஆளப்பட்டுள்ளது. இது நற்றிணைக்குக் கூறப்பட்ட அடிவரையறைக்கு அமைவுடைத்தாகக் காணப்படுகின்றது.

    இப் பதிப்பில்:

என்னுஞ் செய்யுளை அமைத்து அதற்குத் துறை, துறை விளக்கம், சொற்பொருள், விளக்கம் முதலியவற்றுடன் பதிப்பித்துள்ளோம். அதுவும் இறையனார் களவியல் மேற்கோளாகவுள்ளது ஆகையினால் மேற் செய்யுளையும் ஈண்டுக் குறித்துள்ளோம். அறிஞர் ஆய்ந்து பொருந்துவதைக் கொள்க.

  
  ----------