குறுந்தொகை


xix


ஏனையவை தனியே தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல மிகவும் பிழை உள்ளனவாக இருப்பினும் பழைய நூல்களில் நம் நாட்டவர்களுக்கு இடைக்காலத்தே இருந்த புறக்கணிப்பை நன்கு வெளிப்படுத்தும். பொருள் வரையறை செய்யாமல் உள்ளதை உள்ளபடியே பிரதி செய்து வந்தவர்கள் ஓர் எழுத்தை மற்றோர் எழுத்தாகக் கொண்டு எழுதி விட்டதனாலும் தெரியாத இடங்களில் தாமே ஊகித்துப் புதியனவாக எழுதிச் சேர்த்து விட்டமையாலும் உண்டான மாறுபாடுகள் அளவில. பழம் பிரதிகளில் ஈகார ஏகாரங்களின் பின்னர் யகரவொற்று எழுதப்பட்டிருந்தது. ஆய்த எழுத்தை எழுத வேண்டிய இடத்தில் குகரம் எழுதப்பட்டிருந்தது. சில இடங்களில் இவ்விரண்டுமே காணப்படும். மகர ழகரங்கள், ழகர ளகரங்கள், ககர சகர தகரங்கள், தந்நகர றன்னகரங்கள், லகர வகரங்கள், ரகர றகரங்கள் என்பவை ஒன்றுக்கொன்று மாறாக எழுதப்பட்டிருக்கும். டு, ரு, கு என்பனவும் அ, கு, சு என்ற மூன்றும் தமக்குள் வேற்றுமை தெரியாதபடி இருந்தன. ‘ற்ற’ என வரும் இடங்களில் ‘த்த’ என்ற பாடம் காணப்பட்டது. ஓரிடத்தில் காசினை என்பதில் ‘கா’ என்னும் எழுத்து, ‘தூ’ என மாறி அதன்பின் ஒரு சகர ஒற்றுத் தோன்றித் தூச்சினை என்று எழுதப்பட்டிருந்தது. இங்ஙனம் பல பிரதிகளிலும் காணப்பட்ட பாடங்களையும் அவற்றின் மாறுபாட்டின் வரலாற்றையும் விரிக்கின் மிகப் பெருகும்.

    5. பழைய கருத்து: கருத்தில் பொருத்தம் இல்லாத சொற்கள்நகவளைவுக்குள் அமைக்கப்பட்டன. இதில் உள்ள சில கடினமான சொற்களுக்குப் பொருள் இருதலைப் பகரத்துள் அமைக்கப்பட்டிருக்கின்றது. சில செய்யுட்களுக்கு இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன.

    6. ஆசிரியர் பெயர்கள்: சுவடிகளில் இருந்தவாறே இப்பெயர்கள் அமைக்கப்பெற்றன.

    7. பதவுரை : அந்வயப்படுத்திப் பொருள் விளக்குதற்குரிய சொற்களைப் பெய்து பதவுரை எழுதப்பட்டுள்ளது; பல இடங்களில் விளி முன்னத்தால் வருவித் தெழுதப்பட்டது. சில செய்யுட்களுக்கு ஒருவாறு உரை எழுதினும் முடிபு முதலியன தெளிவாக இன்மையின் என் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை.

    8. முடிபு :- வினை முடிபு இத்தலைப்பிற் காட்டப்பட்டது.

    9. கருத்து:- செய்யுளின் கருத்துச் சுருக்கமாக எழுதப்பட்டது.

    10. விசேட உரை :- பதசாரங்களும், இலக்கணச் செய்திகளும், பொருள் விளக்கங்களும், வரலாறுகளும் இப்பகுதியில் எழுதப்