இடையிலும் அருவியின் அருகிலும் இது வளரும். மேல் காற்றால் முறிந்து வீழும். இதன் மலர்த்தொகுதிக்குப் புலியை உவமை கூறுவர். பொதியில் மலையிலுள்ள வேங்கை ஒரு செய்யுளில் சிறப்பிக்கப் பெறுகின்றது. இதன் மலர் மணமுடையது மகளிரால் கூந்தலில் அணியப்படுவது.
வேம்பு
பாலை நிலத்தில் காணப்படுவது. இளவேனில் காலத்தில் மலரும். இதன் அடிமரம் கரிய நிறமுடையது. இதன் பூவைப் பனந்தோட்டில் வைத்து ஆடவர் சூடுவர். இதன் பழத்தைக் கிளி உண்ணும்; அப்பழத்திற்குப் பொற்காசு உவமிக்கப் படுகின்றது.
அணில்
இது மக்கள் நிறைந்துள்ள இடத்தில் வருவதற்கு அஞ்சும்; அவர்கள் இல்லாத இடத்தில் விளையாடும். “மக்கள் போகிய வணிலாடு முன்றில்” என்று ஒரு பாழிடம் கூறப்படுகின்றது. இதன் பல் கூரியது.
ஆடு
வெள்ளாட்டினை வெள்ளை என்று கூறுவர். அது சிறிய தலையை உடையது. ஆட்டு மந்தையைக் கொக்கின் கூட்டத்திற்கு உவமையாக ஒருவர் கூறுவர். குறிஞ்சி நில மாக்கள் ஆட்டுக் குட்டியைப் பலியிட்டு வெறியாடுவர்.
ஆமான்
காட்டுப் பசுவை ஆமான் என்பர். அமர்த்த கண்ணை உடையது இது. வேட்டுவரால் அலைக்கப்பட்ட ஆமானினது கன்று கானவர் வாழும் ஊரில் புக்கு அவர் குடியில் பழகி வளரும்.
ஆமை
ஆமையின் பிள்ளையைப் பார்பென்றல் மரபு. அது தாய் முகம் நோக்கி வளர்வது. “யாமைப் பார்ப்பி னன்ன காமம்” என்று அதனைக் காமத்திற்கு உவமை கூறுவர் ஒரு புலவர்.
எருமை
மருத நிலத்தில் உழவர்களால் வளர்க்கப்படுவது. இதன் கழுத்தில் மணி கட்டுவது வழக்கம். கன்றை ஈன்ற எருமை உழவனால் தனியே கட்டப்பட்ட அக் கன்றை விட்டு அகலாது
1. | ஊர்வனவும், நீரில் வாழ்வனவும் இவ்வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. | |