குறுந்தொகை


liv


அருகில் உள்ள பயிரை உண்ணும் என்று அதன் அன்பு ஒரு பாட்டில் விளக்கப்பட்டிருக்கின்றது. இது நடுயாமத்தில் கரைவதனால் தலைவி துயர் உறுவதாகக் கூறுதல் புலவர் வழக்கம்.

  
எலி

    வீட்டில் வளரும் எலியை இல்லெலி என்பர். இதனை யாமத்தில் தேடிக் காட்டுப் பூனை உண்ணும்.

  
எறும்பு

    இந்நூலில் ஒரு செய்யுளில் எறும்பு எறும்பியெனச் சொல்லப்படுகின்றது. இதன் வளையை அளை என்றும் கூறுவர்; அது மிகவும் சிறியது. குறிஞ்சி நிலத்தில் பாறைகளில் உள்ள குறுஞ்சுனைகளுக்கு அவ்வளைகள் உவமையாகக் கூறப்படுகின்றன.

  
ஓந்தி

     இது பாலை நிலத்தது. இதன் முதுகிற்குக் கருக்கரிவாளை ஒரு புலவர் உவமை கூறுகின்றார். இதன் ஆணைப் போத்தென்றல் மரபு. பாலை நிலத்தில் செல்வார் பார்க்கும் நிமித்தத்திற்குரிய பொருள்களுள் இதுவும் ஒன்று.

  
கடமா

     கடமை, கடமா என்பன ஒரு பொருட்சொற்கள். இவ்விலங்கு தினைக்கொல்லையில் புகுந்து தினையை உண்ணும். வேட்டுவர் இதனை அலைத்து வேட்டையாடுவர்.

  
குதிரை

     குதிரையை மக்கள் பலவாறு பயன்படுத்திக் கொள்வர். தனியே ஏறிச் செலுத்துவதும், தேரில் பூட்டிச் செலுத்துவதும் உண்டு. போரில் குதிரைப்படை ஒரு பிரிவாகும். தேரில் பூட்டிய குதிரையின் வேகத்திற்குக் காற்றை உவமிக்கின்றார் ஒரு புலவர். போர்க் குதிரை துள்ளி எழுவதை மற்றொரு புலவர் குறிக்கின்றார்,

  
குரங்கு

     இதில் பலவகைகள் உண்டு. முசுவென்னும் இனத்தின் முகம் கரியதாக இருக்கும். கருங்குரங்கின் உடல் முழுவதும் கரியதாகவும் முகம் வெள்ளியதாகவும் இருக்கும். கருங்குரங்கை ஊகம் என்பர். குரங்கின் பல் கூரியது; வாய் சிவப்பாக இருக்கும். இதன் ஆண் கடுவன் கலை என்றும், பெண் மந்தி என்றும், குட்டி குருளை பறழ் பார்ப்பென்றும் வழங்கப்படுகின்றன. குரங்கு மிக உயர்ந்த மரங்களிலும் ஏறிப் பாயும் இயல்பினது; மாம்பழத்தைக் கடித்து உண்ணும்; பலாப்பழத்தைத் தோண்டிச் சுளையை உண்ணும்;