பாம்பு
இதில் பல வகைகள் உண்டு. பச்சைப் பாம்பு, நல்ல பாம்பு,மலைப்பாம்பு என இந்நூலில் கூறப்படுகின்றன. பச்சைப்பாம்பின் கருப்ப முதிர்வு கரும்பின் கூம்புக்கு உவமை ஆகும்.நல்ல பாம்பு மிக்க விஷம் உடையது. வெண்ணிறமான நாகம்ஒன்றுண்டு. அதன் குட்டி கடித்தாலும் யானை இறந்துபடும்.நாகப்பாம்பின் தலையில் மணி உண்டு; அது நீல நிறம் உடையது.பாம்பு காந்தள் மலருக்கும், அதன் உரி கானலுக்கும் அருவிக்கும்,அதன் மணி தும்பி என்னும் வண்டிற்கும் உவமை ஆக்கப்படுகின்றன.
புலி
மலையைச் சார்ந்த இடங்களிலே புலி வாழும். இது யானையைத் தாக்குதலும் யானையால் தாக்கப்பட்டு வலி சோர்தலும் உண்டு. யானை, செந்நாய், மரையினம்முதலியவற்றைக் கொன்று உண்ணும். இதன் உடலில் வளைந்தகோடுகள் இருக்கும். கண்கள் செந்நிறம் உடையன. இதன்உடலுக்கு வேங்கை மரத்தின் பூத்த கிளையும், முழக்கத்திற்குக்கடல் ஒலியும் ஒப்புக் கூறப்படுகின்றன. இருந்தபடியே இருபக்கத்திலும் பார்க்கும் இயல்பினது இது. தான் கொன்றவிலங்குகளை மலைக் குகையிலே இட்டு வைத்திருக்கும். இரவிலேபிற விலங்குகளை வேட்டையாடி உண்ணும். இதன் ஆணைஏற்றையென்றல் மரபு.
மரையினம்
இவ்வினத்தில் பெண்ணை மரையாவென்றும், ஆணைமரையேறென்றும் வழங்குவர். இது மரங்களின் இலைகளையும்நெல்லிக்காயையும் உண்ணும் இயல்பினது. புலி இதனைக்கொன்று உண்ணும். மலைச் சுனையிலுள்ள மலர்களைத் தனதுமூச்சினால் ஒதுக்கி விட்டு நீரைப் பருகும். இதன் தன்மையைஒரு புலவர் எடுத்துரைக்கின்றார்.
மான்
மான் பெரும்பாலும் முல்லை நிலத்திற்குரியதாகச் சொல்லப்படும். இதன் ஆண் கலை இரலை எனவும், பெண் பிணைஎனவும், குட்டி மறி எனவும் வழங்கப்படும். புள்ளியை உடையமானைப் 1புகரி என்பர். ஆண் மானின் கொம்புகள் நெறிந்தும்திரிந்தும் கவைத்தும் இருக்கும். இது மழையற்ற காலத்தில்வெம்மையினால் வருந்தும். மழை பெய்த புனத்தில் அறுகு