குறுந்தொகை


lxxx


தலைவியைப் பாராட்டுகின்றாள். ஒருகால் தலைவனது ஒழுக்கக் கேட்டைப் பற்றித் தோழி குறை கூறுகின்றாள்; “அவர் கொடியரென்னும் கொடிய வார்த்தையை நாம் ஏன் கூற வேண்டும்? அவருடைய மனையில் பல கடமைகளைச் செய்ய வேண்டிய நமக்கு இதைப் பற்றி என்ன கவலை?” (181) என்று தலைவி அதனைப் பாராட்டாமல் பேசுகிறாள். தலைவன் பரத்தையரிடத்தில் இருந்து வந்த காலத்தில் அவள் சிறிதும் முகம் கோணாமல் இனிய முகத்தோடு எதிர்கொண்டு பேணுகின்றாள். அப்பொழுது தலைவியினுடைய கற்பு ஒரு தெய்வத் தன்மையோடு விளங்குகின்றது. தோழி, “இதுவல்லவா கடவுள் கற்பு!” என்று எண்ணுகின்றாள். அடுத்த கணத்திலேயே, “இவள் அறிவிலி; இப்படிச் செய்யலாமோ?” என்கின்றாள். தலைவியோ, தலைவனைச் சான்றோனாக எண்ணுபவள்; தெய்வமாக மதிப்பவள்; நீ ஏன் வருந்துகின்றாய்? சான்றோர் புகழ்ந்தாற்கூட நாணுவார்கள். பழியை எங்ஙனம் தாங்குவார்கள்?” என்று தோழிக்குச் சமாதானம் கூறுகின்றாள். தோழிக்கு இந்தத் தலைவியின் குடிப் பிறப்பின் இயல்பு விளங்கவில்லை. அப்படிப் பிறத்தல் வெறுக்கத் தக்கதாகத் தோற்றுகின்றது; “சீசீ; இந்தக் குடிப் பிறத்தல் மிகவும் கெட்டது. குல மகளிராகப் பிறத்தல் வெறுக்கத் தக்கது. இன்று காலையில்தான் இவன் பரத்தையரோடு அளவளாவுவதற்காகத் தேரில் ஏறி ஊரறியச் சென்றான். மாலையில் இங்கே வந்து நிற்கின்றான். இவளும் உடன்பட்டு வரவேற்கின்றாள்” என்று அவள் கூறுகின்றாள். உண்மையில் அவள் குடிப் பிறப்பையும் கற்பையும் பழிக்கின்றாளா? இல்லை; அந்த நிலையில் மக்களாகப் பிறந்தார் யாரும் அங்ஙனம் ஒழுகுதல் அரிதென்று கருதியே அவ்வாறு கூறுகின்றாள்.

    தலைவி ஊடுவதும், பாணன் விறலி முதலியவர்களைத் தலைவன் தூதாக விடுத்தலும், தலைவி வாயின்மறுத்தலும், தலைவனே நேரில் வந்து இரத்தலும், அவன் தன் பிள்ளையைத் தழுவிக் கொண்டும் விருந்தினரை அழைத்துக் கொண்டும் வீடு புக்குத் தலைவியைக் கண்டு அளவளாவுவதும், பரத்தையர் தலைவியைக் குறை கூறுவதும், தலைவி முந்நாட் பூப்பை அடைந்த காலத்தில் தலைவனைப் பிரிந்திருத்தலும், வேறு பல செய்திகளும் இக் காலத்து நிகழ்ச்சிகளாம்.

    பரத்தையிற் பிரிவு வரையில் தலைவன் தலைவியர்களுடைய அன்பு தலைமைக் கருத்தாக இருந்து இவ் வரலாற்றை நடத்துகின்றது. பரத்தையிற் பிரிவில் தலைவியின் கற்பே இலக்காக நிற்ப, அதனைச் சுற்றிப் பற்பல நிகழ்ச்சிகள் புனையப்படுகின்றன. எப்பொருள் எத்தன்மைத்தாயினும்