குறுந்தொகை


lxxxvii


தண்டனை புரியும் அரசன் நரகில் வீழ்வான் என்பது அக் காலத்தினர் கொள்கை. அவனைப் புலவர் வெளிப்படப் பழித்துரைப்பர்.

     அரசர்கள் தம்முடைய நகரத்தில் காவல் மரமாக ஒன்றை வைத்து வளர்த்துப் பாதுகாப்பர்; அது கடிமரம் எனப்படும். ஒவ்வோர் அரசருக்கும் அது வேறு வேறாக இருந்தது. நன்னனென்னும் ஓர் அரசனுடைய காவல் மரம் மா. ஓர் அரசனது நாட்டின் மேல் படையெடுக்கும் மற்றோர் அரசன் முதலில் அவனது காவல் மரத்தை வெட்டி விட்டுத்தான் நாட்டினுள் புகுவான்.

    தேர், யானை, குதிரை, வீரர்கள் என்னும் நால்வகைப்படைகளை அரசர்கள் வைத்திருந்தனர்; வீரர்களில் வாட்படை உடையார், வேற்படை உடையார், விற்படை உடையார் முதலிய பிரிவுகள் உண்டு. கேடகத்தை உடைய படையும் இருந்தது. படைக்குத் தலைவன் ஏனாதி எனப்படுவான்; சேனாபதி என்பதன் திரிபே அது, பாண்டியனுக்கு ஏனாதியாக இருந்த ஒருவர் இயற்றிய செய்யுள் ஒன்று (156) இருக்கிறது. அரசர் பகை அரசரோடு போர் புரியும்போது வேறு சிற்றரசர்களையும் துணையாகக் கொண்டு போர் புரிவர். வேந்தருடைய அதிகாரிகளே படையை நடத்திச் சென்று போர் புரிந்து வருதலும் வழக்கம். யானைப் படையைக் கொன்று வெற்றி பெறுதல் சிறந்த வீரமாகக் கருதப்பட்டது. அங்ஙனம் யானையைக் கொன்ற பின்னர் வீரன் இறந்தாலும் அதனால் குறைவு ஒன்றுமில்லை. அதிகன் அங்ஙனம் பட்டவனென்று சொல்லப்படுகின்றான்.

    பகை அரசருடைய நாட்டுப் பசுக்களை ஓட்டி வருதலும், அதனை மீட்கும் பொருட்டுப் பகை அரசர் வருதலும் போருக்கு முன் நிகழும் நிகழ்ச்சிகளாகும். போரில் அரசரும் வீரரும் அறநெறி பிறழாது நடுநிலைமையில் நின்று பொருவர்; வஞ்சியாமல் எதிர் நின்று கொல்வர்; இதனை நுகம்படக் கடத்தல் என்று புலவர் இயம்புவர்.

    போரில் வெற்றி பெற்ற வீரர்கள் அக் களிப்பினால் ஆரவாரம் செய்வர்; வெற்றி முரசு முழக்கப்படும் (380). அவ்வீரர் கள்ளை வீரபானமாக உண்பது வழக்கம்.

  
ஊரமைப்பு

    ஊர்களில் பலவகைத் தெருக்கள் இருந்தன. அந்தணர் முதலிய பல்வேறு சாதியினரும் கைத் தொழிலாளரும் இனிது வாழ்ந்து வந்த வீதிகள் இருந்தன. அந்தணர் தெரு தூய்மையை உடையதாகவும் நாயில்லா வாயில்களை உடையதாகவும்