குறுந்தொகை


cvii


நன்னாகையார், பூங்கணுத்திரையார், வருமுலையாரித்தி, வெள்ளி வீதியார் என்பார் பெண்பாற் புலவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களுள் அள்ளூர் நன்முல்லையார், ஒளவையார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், வெள்ளி வீதியார் என்பவர்கள் மிக்க புகழ் வாய்ந்தவர்கள். ஆதிமந்தியார் என்பவர் கரிகாற் பெருவளத்தானுடைய மகள் என்று தெரிகின்றது.

  
உறுப்பால் வந்த பெயர்

     ஆசிரியன் பெருங்கண்ணன், காரிக் கண்ணனார், கொல்லிக் கண்ணன், நெடுங்கண்ணன், பூங்கண்ணன், பூங்கணுத்திரையார் என்பார் தம் கண்ணின் இயல்பால் பெயர் பெற்றவர் போலும். நரிவெரூஉத்தலையார், சீத்தலைச் சாத்தனார் என்பவர்களுக்குத் தலையால் வந்த பெயர்கள் அமைந்தன. கடுந்தோட் கரவீரன், திப்புத் தோளார், பெருந்தோட் குறுஞ் சாத்தன் என்பார் தோளால் பெயர் பெற்றார். பரூஉ மோவாய்ப்பதுமனார் என்பதும் உறுப்பால் வந்த பெயர். ஐயூர் முடவனார், தங்கால் முடக்கொல்லனார் என்னும் இருவரும் முடவர் என்பதும் அப்பெயர்களால் உணரப்படும்.

  
அடை மொழிகள்

     சில பெயர்களுக்கு முன் மா, பெரு, முது, குறு, இள, ந, நல் என்னும் அடைகள் அமைந்துள்ளன. தொல் கபிலர் என்பதில் தொன்மை என்னும் அடை வந்தது. இவை ஒவ்வொரு காரணம் பற்றியே அமைந்தன போலும். அங்ஙனம் வந்தவை வருமாறு:

 (1).  
இளமை: இளங்கீரந்தையார், இளங்கீரனார், இளம் பூதனார், இளங்கண்ணன், இளம்போத்தன், மருதன் இளநாகனார், இளவேட்டனார், வாயிலிளங்கண்ணன்; 
 (2).  
குறுமை: அண்டர் மகன் குறுவழுதி, குறுங்கீரன்; 
 (3).  
சிறுமை: சிறு கந்தன்; 
 (4).  
ந: அழிசி நச்சாத்தனார், நச்செள்ளையார், நக்கீரனார்; 
 (5).  
நன்மை: அள்ளூர் நன் முல்லையார், நன்னாகையார்நல்வெள்ளியார், நல்வேட்டனார்; 
 (6).  
பெருமை: பெருங்கண்ணன், கடுகு பெருந்தேவன் பெருஞ்சாத்தன், பாரதம் பாடிய பெருந்தேவனார், பெரும் பதுமனார், பெருங்கொல்லன், பெருங்கந்தன்; 
 (7).  
மா: மாசாத்தியார், மாமலாடன், மாமூலனார், மாவளத்தன்; 
 (8).  
முதுமை: முதுகூத்தனார், முதுகொற்றனார், மூதெயினனார்.