குறுந்தொகை


cxx


மகடூஉ”, (புறநா. 331) என்று கற்புடை மங்கையின் இயல்பையும், “தேவிற் சிறந்த திருவள்ளுவர்குறள்வெண், பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார் - நாவிற், குயலில்லை சொற்சுவையோர்வில்லை மற்றுஞ், செயலில்லை யென்னுந் திரு” (திருவள்ளுவ மாலை) என்று திருக்குறளின் சிறப்பையும் பாராட்டியிருத்தல் மதிக்கற்பாலது; இவர் வாக்கில் பெரும் பாலும் காணப்படுவது பாலை நிலத்தின் இயல்பு; இவர் செய்தனவாகத் தெரிகின்ற வேறு பாடல்கள் 5 (அகநா. 3; புறநா. 1; திருவள்ளுவ. 1)

    உறையூர் முதுகொற்றனார் (221, 390): இடையர் கறந்த பாலை வீட்டில் கொடுத்து விட்டு இனநிரை இருக்கும் இடத்துக்குக் கூழொடு பெயர்தலையும் ஆறலை கள்வர் வணிகர் கூட்டத்தை வழிப்பறிக்க முயல்வதையும் இவர் குறிப் பித்துள்ளார்.

    ஊண்பித்தையார் (232): இப்பெயர் ஊண்பித்தை என்றும் பிரதிகளில் உள்ளது. இவர் பெண்பாலார். இவர் பாடிய செய்யுளின் பழைய கருத்து, பிரிவிடைத் தோழி வற்புறுத்திய தாக உள்ளது. இச் செய்யுள் தலைவியின் கூற்றோ என்று ஐயுறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

    எயிற்றியனார் (286): தலைவன் தோழியிடத்துத் தலைவியை “உள்ளிக் காண்பென் போல்வன்” என்று கூறுங்கால் அவளை உள்ளுதற்குரிய நலன்களைக் கூறுவதாகச் செய்யுள் செய்திருப்பது பாராட்டற்குரியது. இவர் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் என்று தோற்றுகிறது.

    ஐயூர் முடவனார் (123, 206, 322): இவருக்கு முடவனார் என்னும் பெயர் சினையால் வந்தது போலும்; ஐயூர் என்பது சோழ நாட்டகத்ததோர் ஊர். இவர் நடந்து செல்லுதற்கு இயலாத முடவராதலின், தாமான் தோன்றிக்கோனை அடைந்து வண்டி இழுத்தற்குப் பகடு வேண்டுமென்று பாடி, அவன் பகடுகளும் பல பசு நிரைகளும் ஊர்தியும் கொடுக்கப் பெற்று வாழ்ந்தவர்; இறந்தோர் உடம்பைத் தாழியால் கவித்தல் உண்டென்பதும் வீரச் சிறப்பும் கொடைச் சிறப்பும் இவர் பாடல்களில் காணப்படுகின்றன, இவரால் பாடப்பட்டோர் ஆதனெழினி, தாமான் தோன்றிக் கோன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் கூட காரத்துத் துஞ்சியமாறன் வழுதி யாவர். “அறவ ரறவன் மறவர் மறவன், மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன், இசையிற் கொண்டான்” (புறநா. 399) என்பது இவர் தாமான் தோன்றிக் கோனைப் பாராட்டிய