குறுந்தொகை


cxxvii


குன்றூர் கிழாரும், பொருந்திலிளங்கீரனாரும், மாறோக்கத்து நப்பசலையாரும் இவரைப் பலவாறு பாராட்டியுள்ளனர். இவரால் பாடப் பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, சேரமான், செல்வக்கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன், வேள்பாரி, வையாவிக் கோப்பெரும்பேகன் என்பவர்கள். கொல்லி மலை, பறம்பு நாடு, பறம்பு மலை, முள்ளூர்க்கானம், முள்ளூர்மலை என்பவை இவர் காலத்தில் விளக்கமுற்று இருந்தன. இவர் குறிஞ்சியைப் பாடுவதில் மிக்க திறமை வாய்ந்தவர். நட்பு, வண்மை, நன்றி மறவாமை என்னும் இயல்புகளை இவர் செய்யுட்களில் காணலாம். பரணருக்கும் இடைக்காடருக்கும் இவர் சிறந்த நட்பினர். இவருடைய விரிவான வரலாற்றைப் பத்துப் பாட்டில் உள்ள பாடினோர் வரலாற்றில் காணலாம்.

    கயத்தூர் கிழார் (354): கயத்தூர் என்பது சோழ நாட்டின் கண் உள்ளதோர் ஊர். இவர் வேளாண் மரபினர். தோழி தலைவனிடம், “யாம் உனக்கு இனியமாக இருந்தும் நெடுங்காலம் பழகினமையினால் நின்னால் வெறுத்தற்கு ரியே மாயினேம்” என்னும் நினைவு பற்றி, “நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும், ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்கும்” என்று கூறுவதாக இவர் ஒரு செய்யுள் செய்திருக்கிறார். “நீ எம்மைப் பிரிவையாயின் எம்முடைய தந்தையின் வீட்டிக்கு அழைத்துச் செல்வாயாக” என்று தோழி தலைவியை உளப்படுத்தித் தலைவனிடம் கூறியது உலக வழக்கை ஒட்டிய கூற்றாகும்.

    கயமனார் (9, 356, 378, 396): பசிய இலையினின்றும் மேலெழுந்த நெய்தல் பூ கழியில் வெள்ளம் மிகும் போதெல்லாம் கயத்தின் கண்ணே மூழ்கும் மகளிருடைய கண்ணை ஒக்குமென்று இவர் ஒரு செய்யுளிலே (9) பாடுகின்றார். இதுபற்றி இவர் கயமனார் என்ற சிறப்புப் பெயர்பெற்றார் என்று ஊகிக்கப்படுகின்றது. போரில் இறந்த மகனுடைய பிரிவாற்றாது வருந்தும் நற்றாயின் இயல்பை இவர் புலப்படுத்தி உள்ளார் (புறநா. 254). அகநானூற்றிலும் புறநானூற்றிலும் இவர் பாடல்களில் புலம்பல் மிகுதியாகத் தோற்றுகின்றது. அன்னியென்பான் குறுக்கைப் பறந்தலையில் திதியன் என்பானை வெற்றி கொண்டு அவனது காவல் மரமாகிய புன்னையை வெட்டினான் என்ற செய்தி (அகநா. 145) இவரால் கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டில்