குறுந்தொகை


cxxxii


உறுப்பான் வந்தது போலும்; காரி - கரிக் குருவி; இவர் வணிகர்; இதனை, “ஊரும் பேரும்” (தொல். மரபு. சூ. 74. பேர்’ என்பதன் விசேடவுரையால் உணர்க; இவர் வாக்கில் காவிரி கடலொடு கலக்கும் சங்கமுகத்துறை கூறப் பெற்றுள்ளது (அகநா. 123.) பாண்டியனுக்குத் திருமாலையும் அப் பாண்டியனும் சோழனும் ஒருங்கிருந்த பொழுது அவர்களுக்குக் கண்ணபிரான் பல தேவரிருவரையும் உவமை கூறியிருத்தலின், இவர் திருமாலடியவராகக் கருதப்படுகின்றனர். ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்று மேற்கூறிய அரசருக்கு இவர் கூறும் பகுதியும் பிறவும் இன்பத்தைத் தருவன. அயனே திருவள்ளுவராக வந்து திருக்குறளைத் தந்தானென்றதனால், அந்நூலின்பால் இவருக்குள்ள நன்மதிப்பு வெளியாகும். இவரால் பாடப் பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, பிட்டங்கொற்றனென்பார். இவர் இயற்றிய பாடல்கள் -8 (அகநா. 2; திருவள்ளுவ. 1; புறநா. 5)

    காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார் (347): இவரூர் காவிரிப் பூம்பட்டினமாகும். இவர் இளவாகையைக் ‘குமரி வாகை’ என்கிறார்.

    கிடங்கிற் குலபதி நக்கண்ணனார் (252): கிடங்கில் என்பது ஓர் ஊர். இவ்வூரில் புலவர் பலர் சங்க காலத்தே இருந்தனர். இவரது இயற்பெயர் கண்ணன். ‘ந’ என்பது சிறப்புப் பற்றி வந்தது. ஆயிரம் மாணவர்களை ஆதரித்துக் கல்வி புகட்டுவோர் குலபதியாவர். இப்பட்டத்தை உடையவராதல் பற்றி இவர் சிறந்த ஆசிரியர் என்று தெரிகிறது. ‘சான்றோர் புகழு முன்னர் நாணுப; பழி யாங்கு ஒல்ப; அதனால் தோழி, மடவை நீ யெனக் கடவுபு துனியல்’ என்று தலைவி கூறுவதாக அமைந்த இந்தச் செய்யுள் ஒன்றே இவர் இயற்றியதாகத் தெரிகிறது.

    கிள்ளி மங்கலங் கிழார் (76, 110, 152, 181): இவர் பெயர் கிள்ளி கிழார் என்றும் சில பிரதிகளில் காணப்படுகிறது. இவர் வேளாண் மரபினர். கிள்ளி மங்கலங் கிழார் மகனார் சோகோவனார் என்பவர் ஒருவர் (நற். 365) - ஆம் செய்யுளைப் பாடியிருக்கிறார். அவரை இவருடைய மகனார் என்று கொள்ளக் கூடும். தலைவரைப் பலகாற் காண்டலால் வளரும் தன்மையை உடைய காமத்திற்குத் தாய்முகம் நோக்கி வளரும் தன்மையை உடைய ஆமையின் பார்ப்பை