கொற்றனார் (218, 358): இவர் நக்கீரருடைய புதல்வர். கீரங்கொற்றன் எனவும் வழங்கப்படுவர். இறையனாரகப் பொருளுக்கு முதலில் நல்லுரை கண்டு அதனை நக்கீரர் தம் புதல்வராகிய இவருக்குக் கூறினார் என்று இறையனாரகப் பொருளுரை கூறும். இவர் நற்றிணையில் ஒரு செய்யுளை இயற்றி உள்ளார்.
கோக்குள முற்றனார் (98): கோக்குளம் என்பது ஓர் ஊர்; வெண்காடு. கோக்குள முற்றம் என்ற சொல்லே ஓர் ஊரின் பெயர் என்றும் கொள்ளுதல் கூடும். இந்நூலில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றுமாக (96) இவர் இரண்டு பாடல்களைச் செய்தவர். இவ்விரண்டிலும் தலைவன் பிரிவினால் தலைவியின் மேனி பசலை பாய்ந்து அழகு அழிந்தமையைக் கூறியுள்ளார். இவர் பாடல்களில் நெய்தலும் முல்லையும் சிறப்பிக்கப் பெற்றுள்ளன.
கோப் பெருஞ்சோழர் (20, 53, 129, 147): பிசிராந்தையாரின் நண்பராகக் கருதப்பட்டவர் இவரே. புலவர்பால் மிக்க அன்பு பூண்டவர், தலைவன் பாங்கனை விளிப்பதாக இவர் கூறும் பகுதியில், “எலுவ சிறாஅ ரேமுறு நண்ப, புலவர் தோழ” (129) என்று புலவர்களுக்குத் தோழனாக இருத்தலின் பெருமையைப் புலப்படுத்தி உள்ளார். அரசர்களுக்கு இன்றி அமையாத அருளும் அன்பும் 1. தலைவனுக்கு இன்றி அமையாதவை என்று கூறுவதனால் (20) இவரது செங்கோன்மை புலனாகும். புறநானூற்றில் இவர் பாடியனவாக மூன்று செய்யுட்கள் காணப்படுகின்றன (214-16). அவை இவருடைய உயரிய மனப்பான்மையை விளக்குவனவாகும். அங்கே இவர் கூறும் நீதிகள் பலகால் படித்து இன்புறற்பாலன.
கோவதத்தர் (66, 194): வம்பமாரியைக் காரென மதித்துக் கொன்றை மலர்ந்ததனால் அவை அறிவற்றவை என்று தோழி கூற்றில் இவர் கூறியுள்ளார். மயில் அகவுதல் காம உத்தீபனம் என்பது இவர் வாக்கினால் தெரிகிறது.
கோவூர்கிழார் (65): இவர் வேளாண் மரபினர்; கோவூர் என்னும் ஊரினர்; சோழர் பரம்பரையோரால் ஆதரிக்கப் பெற்றவர்; நன்றியறிவு உள்ளவர்; பிறருடைய சீற்றத்தைத் தணித்தலிற் கண்ணுங் கருத்துமாக இருந்து வாழ்ந்தவர்; யாவரும் மன ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென்பது இவரது கொள்கை. கனா நூல், சோதிட நூல், இசை நூல் என்பவற்றில்
1. | அருளு மன்பு நீக்கி நீங்கா, நிரயங் கொள்பவரோ டொன் றாது காவல், குழவிகொள் பவரி னோம்புமதி’ (புறநா. 5) |