குறுந்தொகை


cxxxviii


போலக், கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர், அடுதீ யல்லது சுடுதீ யறியா, திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்”, “நிறனுற்ற வராப்போலும் வறன்”, “வெய்துண்ட வியர்ப்பல்லது, செய்தொழிலான் வியர்ப்பறியாமை, ஈத்தோனெந்தை” என்பவை இவருடைய பாடல்களுள் சிறந்த பகுதிகள். இவரால் பாடப்பட்டோரும் இவர் காலத்தவரும் சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சோழன் குராப் பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், சிறுகுடி கிழான் பண்ணனென்போரும் அவர்களைப் பாடிய புலவர்களும் ஆவர். இவர் இயற்றிய வேறு பாடல்கள் - 17 (திருவள்ளுவ. 1; நற். 1; புறநா. 15)

    கோவேங்கைப் பெருங்கதழ்வர் (134): வேங்கை மரத்தைக் கதழ்வீழ் அருவி தாக்குவதாகக் கூறி இருத்தலின் இவர் இப்பெயர் பெற்றனர்.

    கோழிக் கொற்றனார்(276): இவர் கோழி என்ற பெயரை உடைய உறையூரைச் சார்ந்தவர்; உறையூர் பல புலவர்களுடைய இடமாக இருந்தமை வெளிப்படை. இவரது இயற்பெயர் கொற்றன் என்பது. தலைவன் அறங்கூற வையத்துச் சான்றோரிடம் தலைவியைப் பற்றிக் கூறி, அவனைப் பெற விரும்பிக் கேட்டல் இவர் பாடலில் காணப்படுகிறது.

    சத்திநாதனார் (119): தலைவனை ஓர் இளைய மகள் வருத்தியதற்குச் சிறிய பாம்புக் குட்டி காட்டில் உள்ள பெரிய யானையை வருத்துவதை இவர் உவமை காட்டி உள்ளார்.

    சாத்தனார் (349): சாத்தன் என்ற பெயரிய புலவர் பலராவர். இரந்தோர் வேண்டியவற்றைக் கொடுத்து மீட்டும் அவைதாவென்று சொல்லுவதினும் இன்னுயிர் இழப்பு இனியதாகும் என்ற நீதியைத் தலைவியின் கூற்றால் இவர் அமைத்துள்ளது சிறந்த பகுதியாகும்.

    சிறைக்குடி ஆந்தையார் (56, 57, 62, 132, 168, 222, 273, 300): சிறைக்குடி என்பது ஓர் ஊர். அவ்வூரினர் இவர். “புணரிற் புணராது பொருளே பொருள்வயிற், பிரியிற் புணராது புணர்வே” என்றும், “பொருளே, வாடாப் பூவின் பொய்கை நாப்பண், ஓடுமீன் வழியிற் கெடுவ” (நற். 16) என்றும் பொருளைப் பற்றி இவர் கூறி உள்ளார். பிரிவினும் புணர்ப்பின் மிகுதியையே தம் பாடல்களில் இவர் பலபடப்