குறுந்தொகை


cxl


    சேந்தன் கீரனார்(311): சேந்தனாகிய கீரனார் என்பது இத்தொடரின் பொருள். தலைவியின் கூற்றாக இவர், “கடுந்தேர்யான் கண்டனனோ விலனோ ... ஆய மெல்லாமுடன் கண்டன்றே” என்று கூறியிருப்பது பெண்கள் வழக்கமாகக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது.

    சேரமானெந்தை (22): உத்தம மகளிருடைய நுதல் இயற்கை மணமுடைய தென்று கொண்டு இவர் “தேமூரொண்ணுதல்” என்பர். தோழி தலைவியை ஆற்றுவிக்க வேண்டி, “தலைவன் செலவு நின்னொடும் ஆகும்” என்று கூறுவது இலக்கியங்களில் அருமையாகக் காணப்படுவதொன்றாம். அகநா. 41-ஆம் பாடலும் இவர் இயற்றியது என்பது பல சுவடிகளால் தெரிய வருகிறது.

    தங்கால் முடக் கொல்லனார் (217): தங்கால் - தண்கால்; இது பாண்டி நாட்டில் உள்ளது; திருத்தண்கால் என இக் காலத்தில் வழங்கும்; திருமாலின் நூற்றி எட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. செவிலித் தாய்க்குத் தோழி அறத்தொடு நிற்றலைக் கூறும் பாட்டு (அகநா. 48) அழகமைந்த ஒன்றாகும். இவர் இயற்றிய வேறு செய்யுட்கள் 5 (அகநா. 3; நற். 1; புறநா.1)

    தாமோதரனார் (92): இவர் தெய்வப் பெயரை உடையவர். மாலைக் காலத்தில் பறவைகள் தம் குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்வதைக் கண்ட தலைவி தான் மட்டும் தனித்திருத்தலை நினைந்து நான் இரங்கத் தக்கவள் என்று கூறுவதற்குப் பதிலாக மதிமயங்கி, “அளிய தாமே கொடுஞ் சிறைப் பறவை” என்று கூறுவதாக இவர் பாடியுள்ள ஒரு பாடலே இவர் பெயரால் வழங்குகிறது.

    தாயங் கண்ணனார் (319): எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் என்னும் ஒரு புலவர் பெயர் காணப்படுகிறது. இவரும் அவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. இவருடைய பாட்டில் மயானத்தின் இயல்பும் அதன் தொன்மையும் விளங்கக் கூறப் பெற்றுள்ளன. இந்நூலில் இவர் மாலைக் காலத்தை நன்கு வருணித்துள்ளார்.

    திப்புத் தோளார்(1): உறுப்பால் பெயர் பெற்றவர் இவர். இப்பெயர் தீப்புத் தேளார் என்றும் காணப்படுகிறது. முருகக் கடவுளைச் சார்த்து வகையாகக் கூறும் இவர் பாடலை இத்தொகை நூலின் முதல் பாட்டாக வைத்திருத்தல் இவரது பெருமையை விளக்குவதாகும். செம்மை என்ற சொல்லும் பொருளும் ஐந்து முறை பயின்று வருமாறு நான்கு