குறுந்தொகை


cxlvii


செய்யுட்கள் 57 (நற். 12; அகநா. 32; புறநா. 13). வையாவிக்கோப்பெரும் பேகனால் நீக்கப்பட்ட கண்ணகியை மீட்டும் அவன் அழைத்துக் கொள்ளும்படிப் பாடினர். குட்டுவனையும் அவனது முசிறியையும் புகழ்ந்து பாடியுள்ளார். வல்வில் ஓரி என்னும் வள்ளல் இவரால் பாராட்டப் பெற்றுள்ளான். நன்னன் என்னும் சிற்றரசனுடைய செய்திகள் பல இவரால் உரைக்கப் பெற்றுள்ளன. தொண்டி, உறையூர், காவிரி, ஆர்க்காடு, விச்சியர்கோன், போர், கழார் என்பன இவரால் கூறப் பெற்றுள்ளன. ஆதிமந்தியாரைப் பற்றியும், திதியனைப் பற்றியும், கண்ணி என்பவனைப் பற்றியும் அகநானூற்றில் இவர் கூறியுள்ளார். இவர் பாடிய பாடல் ஒவ்வொன்றிலும் யாரையேனும் புகழாமலும் அக் காலத்து நிகழ்ந்த கதை எதையேனும் அமையாமலும் இரார்.

    பரூஉ மோவாய்ப் பதுமர் (101): பருத்த மோவாயை உடைய பதுமர் என்பது இப் பெயரின் பொருள். தலைவியின் தோளோடு சேர்ந்திருக்கும் நாளுக்கு வையமும் வானகமும் சீர்சாலா என்று இவர் குறித்துள்ளார். தேவர் உலகை, “அரிதுபெறு சிறப்பிற்புத்தேணாடு” என்று இவர் கூறி உள்ளது நோக்கத் தக்கது.

    பனம் பாரனார் (52): அகத்தியனார் மாணவருள் பனம்பாரம் என்ற இலக்கண நூலை இயற்றியவரும், தொல்காப்பியத்துக்குப் பாயிரம் செய்தவருமான பனம்பாரனாரும் இவரும் ஒருவரோ, வேறோ என்று தெரியவில்லை. பெற்றோர் தலைவனுக்குத் தன்னைக் கொடாமல் இருந்து விடுவாரோ என்ற அச்சத்தால் தலைவி மலைப் பக்கத்தில் வாழும் தெய்வத்தால் அலைக்கப்பட்டாற்போல் நடுங்கினாள் என்று இவர் கூறுகின்றார்.

    பாண்டியன் பன்னாடு தந்தார் (270): பல நாடுகளைத் தந்த பாண்டியன் ஒருவனைப் பற்றிய செய்தி “மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வவ்வலின், மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப், புலியொடு வின்னீக்கிப் புகழ் பொறித்த கிளர்கெண்டை, வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்” (கலி. 104), “வடிவே லெறிந்த வான் பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு, தென் திசை ஆண்ட தென்னவன்” (சிலப். 11:18-22) என்ற அடிகளால் தெரிகிறது. பாண்டியன் பன்னாடு தந்தான் என்று