குறுந்தொகை


clix


    மதுரை யீழத்துப் பூதன்றேவனார் (189, 360): ஈழ நாட்டில் இருந்து வந்து மதுரையில் தங்கியவர் இவர். பூதன் என்பது இவருடைய தந்தையின் பெயர். தந்தத்தினால் செய்த தேரின் நேமி போகும்போது மண்ணில் புதைந்த பகுதி போக எஞ்சிய பகுதியே வெளியில் தெரியுமாதலால் அப்பகுதிக்குப் பிறையையும், பயிரைத் துமிக்கும் நேமிக்கு விண்வீழ் கொள்ளியையும் (189) உவமை கூறியுள்ளார். தூக்கணங் குருவிக் கூடுகள் தொங்கும் மூங்கில்களை வாடைக் காற்று அலைத்தலை (நற். 366)யும் காட்டுப் பன்றித் தினையை உண்பதற்குப் பருவாய்ப் பல்லியின் பாடோர்த்துக் குறுகுதலையும் (அகநா. 88) இவர் வாக்கில் காணலாகும். சுரத்தில் ‘பெருங்கை எண்கினம் ஈசலைத் தேடும் புற்றுக்களை உடைய சுவர்களோடு கூடிய புதல்கள் இவர்ந்த அழிந்து பட்ட பொதியிலில் கடவுள் நீங்கிய வலிய தூணினிடம் சேவற் புறா உடனுறை பழமையிற் றுறத்தல் செல்லாது பெடையுடன் வசிக்கும்’ என்று (அகநா. 307) இவர் கூறுவதும் பிறவும் இவருடைய கவி நயம் ஆராய்ச்சி முதலியவற்றைப் புலப்படுத்துகின்றன. இவர் பாடிய வேறு செய்யுட்கள் 4 (நற். 1; அகநா. 3)

    மதுரை யெழுத்தாளன் சேந்தம் பூதனார் (90, 226): சேந்தன் என்பவர் இவருடைய தந்தையார். அரசர் இடும் கட்டளைகளை எழுதும் தொழிலை உடையவர் இவர். அகநா. 207-இல் மகள் போக்கிய தாயின் கூற்றாக இவர் கூறும் செய்திகள் சிறந்த நயம் உடையனவாக அமைந்துள்ளன. குறுந். 90-இல் இவர் காட்டும் உள்ளுறையுவமை இனிமை பயப்பதொன்றாம். இம் மூன்று பாடல்களே இவர் செய்தவை.

    மதுரை வேளாதத்தர் (315): இவருடைய இயற்பெயர் தத்தன் என்பது. மதியத்தின் உதயம் கடலினிடத்தே நீளத் தோன்றுமாறு போல் கரிய மலையினிடத்தே அருவி தோன்றும் என்றும், தலைவன் சூரியனுக்கு ஒப்பாக அச்சூரியனுடன் திரிதரு நெருஞ்சி மலரைப் போன்றவள் தலைவி என்றும் நான்கு அடிகளில் சுருங்கக் கூறி விளங்க வைத்த இவர் புலமைத் திறன் பாராட்டற் பாலது.

    மள்ளனார் (72): சில அடைமொழிகளைப் பெற்றுள்ள மள்ளனார் என்னும் இருவர் குறுந்தொகைச் செய்யுட்களை இயற்றியவராக உளர். இவர் அவர்களினும் வேறாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. தலைவியின் பூவொத் தலமருங்கண் ஏவொத்து நோய செய்தனவென்று தலைவன்