குறுந்தொகை


clxiii


    மீனெறி தூண்டிலார்(54): இவர் யானை இழுத்து விட்ட மூங்கிலுக்கு, மீன் பிடிப்பவர் மேலே இழுத்த தூண்டிலை உவமை கூறியதனால் இப் பெயர் பெற்றார். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

    மோசி கீரனார்(59, 84): மோசி என்பது ஓர் ஊர். மோசி கொற்றனார் இவ்வூரினரே. படுமரத்து மோசி கீரனார் என்னும் புலவர் ஒருவர் இத்தொகை நூலில் பாடியுள்ளார். அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை. ஒருகால் இவர் தெய்வத் தன்மையுள்ள முரசுக் கட்டிலில் அறியாது துயின்று சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையாற் கவரி வீசப் பெற்ற பெருமை வாய்ந்தவர். இவர் அம்மன்னவனையும் கொண்கானங் கிழான் என்பானையும் பாடியுள்ளார். “நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே, மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம்” என்று அரசனின் இன்றி அமையாமையை இவர் புலப்பட்டுத்தியுள்ளார் (புறநா. 186). “தலைவன் நின்னைப் பிரியான்; பிரியின், வேற்று வேந்தன் தானையோடு மதிற்புறத்தே வந்திருப்பப் புறத்தே வாராமல் அகமதிலிற்கிடந்த நன்னன் போல யான் ஆகுவன்” என்று தோழி தலைவிக்குக் குறை நயப்பிங்குங்கால் கூறுவது அழகாக உள்ளது (அகநா. 392). ஆய் அண்டிரனுடைய பொதியில், ஓர் உபகாரியின் அரலைக் குன்றம் இவைகளையும் இவர் பாராட்டியுள்ளார் (59, 84). குறுந்தொகையில் அன்றி இவர் இயற்றியனவாக இப்பொழுது தெரிந்துள்ள வேறு செய்யுட்கள்: 7 (நற். 1; அகநா. 1; புறநா. 4; திருவள்ளுவ மாலை. 1).

    மோசி கொற்றனார் (377): தலைவனது நல்ல இயல்பை அறிந்து ஆற்றியிருக்கும் தலைவி தோழியைப் பார்த்து, “நீ ஆற்றலையே” என்று கூறுவதாக இவர் பாடிய செய்யுள் அமைந்துள்ளது.

    மோதாசனார் (229): மனம் ஒத்துச் செல்கின்ற தலைவன் தலைவியர்க்கு இணைமலர்ப் பிணையலை இவர் உவமை காட்டியுள்ளார். சிறு வயதில் ஓரில்லிலிருந்து கலாம் விளைத் தாரைத் தலைவன் தலைவியாகச் செய்த விதியை இடைச் சுரத்துக் கண்டோர் வியந்து பாராட்டியதாக இவர் செய்யுள் அமைந்து உள்ளது.

    வடமவண்ணக்கன் தாமோதரனார்(85): இவர் பெயர் வட மன்றாமோதரனார் என்றும் பிரதிகளில் காணப்படுகின்றது. வண்ணக்கன் - நாணய பரிசோதகன், நோட்டக்காரன்; இப்பொருள் நீலகேசி உரையில் கண்டது. இவர் வட