குறுந்தொகை


clxvi


அம்பலமாயிற்று” (97) என்று தலைவி தன் வருத்தத்ததைத் தெரிவிக்கும் செய்யுள் சுருங்கச் சொல்லல் முதலிய பல அழகுகளைத் தன்பாற் பெற்ற ஒன்றாம். இஃது ஒரு வகையில் 219-ஆம் செய்யுளோடு ஒத்து இருக்கின்றது. “தலைவன் பொருள் வேட்கையனாகித் தன்னைப் பிரிய நினைப்பானேயானால் இவ்வுலகில் செல்வமே உறுதிப் பொருளாகும், அருளோ தன்னை எவரும் ஏற்றுக் கொள்ளாததாகும்” என்று தலைவி கூறுவதாக இவர் அமைத்துள்ள பாட்டும் (174) அழகு அமைந்த ஒன்றாகும்.

    வெண்மணிப் பூதி (299): இவர் ஒரு பெண்பாற் புலவர். வெண்மணி என்ற ஓர் ஊர் அரியலூரப் பக்கத்தில் உள்ளது. இவர் அவ்வூரினர் போலும். “தலைவனைக் கண்ட கண்ணும் அவன் சொல்லைக் கேட்ட செவியும் வாளா விருக்கத் தோள்கள் மட்டும் அவன் பிரிந்த காலைத் தன் மெலிவைப் புறத்தார் அறியும்படி நெகிழ்ந்தன” என்று தலைவி கூறுவதாக இவர் செய்யுள் அமைந்துள்ளது.

    வெள்ளி வீதியார் (26, 44, 58, 130, 146, 149, 169, 386): இவர் பெண்பாலார். இவர் பாடிய பாடல்கள் பல தம் அனுபவங்களே ஆகும் என்பதும், இங்ஙனமே தம் அனுபவங்களைக் கூறும் ஆதிமந்தியார் என்ற பெண் புலவரும் இவரும் ஒரு காலத்தவர் என்பதும் தொல். அகத். சூ.54-க்கு நச்சினார்க்கினியர் எழுதிய விசேட உரையால் தெரிகின்றன. “கன்று முண்ணாது கலத்தினும் படாது கவினே ... இது (குறுந். 27) வெள்ளி வீதியார் பாட்டு; ‘மள்ளர் குழீஇய விழவி னானும் ... மகனே’ (குறுந். 31); இது காதலற் கெடுத்த ஆதிமந்தி பாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாம் என்று அஞ்சி வாளாது கூறினார். ஆதிமந்தி தன் பெயராலும் காதலனாகிய ஆட்டனத்தி பெயராலும் கூறில் காஞ்சிப் பாற்படும்; ‘ஆதிமந்திபோல, ஏதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே’ (அகநா. 236) எனவும், ‘வெள்ளி வீதியைப் போல நன்றும், செலவயர்ந் திசினால் யானே’ (அகநா. 147) எனவும் அகத்திணைக்கட் சார்த்து வகையான் வந்தன அன்றித் தலைமை வகையாக வந்தில என்பது” அது. வெள்ளி வீதியார் தம் கணவனைத் தேடி அலைந்தமை இவர் வாக்கானும், ஒளவையார் “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே” (அகநா. 147) என்று கூறியிருப்பதனாலும் தெரிய வரும். இவர் பாடிய ‘‘தூது விட்டுத் தலைவரைத் தேடித் தருவேன்” என்ற தோழி கூற்று, “நிலந் தொட்டுப் புகாஅர் வான மேறார், விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார், நாட்டி னாட்டி னூரினூரிற்,குடிமுறை