கிழவோன்மாட்டுப் பெருமை யிற்றிரியாத அன்பின்கண்ணும்தலைவிக்குக் கூற்று நிகழும்; நிலத்தினும்... நட்பே: எனவரும்’ (தொல்.கற்பு.6, இளம்.); ‘இது நிறுத்தற்கட் கூறியது’ (தொல். கற்பு. 6, ந); 'இஃது ஈற்றயலடி மூச்சீர்த் தாயிற்று’ (தொல். செய்.68, ந.); இஃது ஈற்றயலடி முச்சீரான் வந்தமையின் நேரிசை ஆசிரியப்பா’ (வீர.யாப்புப்.9; யா.வி.71; யா. கா. செய்.7, இ.வி.747); ‘ஆசிரிப்பா அளவடியான் வந்தது' (யா.வி.27.)
ஒப்புமைப் பகுதி 1. ‘நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே’’ (தொல். களவு. 20, ந. மேற்.)
2. ‘கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே’’ (ஐங்.184:4.)
1-2. நிலம் வான் கடல் என்ற மூன்றும் பெருமைக்கு எல்லையாகக் கூறப்படுதல்; ‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’’, ‘‘பயன்றூக்கார் செய்த உதவி நயன்றூக்கின் நன்மை கடலிற் பெரிது’’, "வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சம், தானறி குற்றப் படின்’’, (குறள்.102,103, 272); ‘மண்ணினும் வானினுமற்றை மூன்றினும், எண்ணினும் பெரியதோரிடர்’’(கம்ப.அயோமுகி.99.)
3. கருங்கோற் குறிஞ்சி: ‘கருங்கோற் குறிஞ்சிநும் முறைவினூர்க்கே’’(அகநா.308:16); ‘கருங்கோற் குறிஞ்சி யடுக்கம்’’ (புறநா.374:8); ‘கருங்கோற்குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்’’ (பெருங்.1:50:26).
4. நாடனது நட்பு: ‘மலைநாடன் கேண்மை’’ (திணைமா. 18).
3-4. குறிஞ்சித்தேன்: "குறிஞ்சிப் பெருந்தேனிறால்’’ (கல்.'வேற்றுப் பிடி')
(3)
(பிரிவாற்றாமல் வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு,'தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைந்து ஆற்றினேன்'என்பது புலப்படக் கூறியது.) 4. | நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே |
| இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி |
| அமைதற் கமைந்தநங் காதலர் |
| அமைவில ராகுத னாமென் னெஞ்சே. |
என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோ.ழிக்குக் கிழத்திஉரைத்தது.
காமஞ்சேர் குளத்தார் (பி-ம். காமஞ்சொகினத்தார்).
(பி-ம்) 1. ‘நோமே நெஞ்சே’
(ப-ரை.) என் நெஞ்சு நோம் என் நெஞ்சு நோம்- எனது நெஞ்சம் வருந்தா நிற்கும், எனது நெஞ்சம் வருந்தா நிற்கும்; இமை தீய்ப்பு அன்ன-இமைகளைத் தீயச்