நரிவெரூஉத்தலையார். (பி-ம.்) 2. ‘மின்னிலைப் புன்னை’, ‘மென்னிழற் புன்னை’, 3.‘துவலை’.
(ப-ரை.) தோழி -, வதி குருகு உறங்கும்- தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குதற்குக் காரணமாகிய, இன்நிழல் புன்னை - இனிய நிழலை உடைய புன்னை மரமானது, உடை திரைதிவலை அரும்பும்- கரையைச் சாரச்சார உடைகின்ற அலைகளால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற, தீ நீர் - கண்ணிற்கு இனிதாகியநீர்ப் பரப்பை உடைய, மெல்லம் புலம்பன்- மெல்லிய கடற்கரையையுடையதலைவன், பிரிந்தென- பிரிந்தானாக, பல் இதழ் உண் கண்- பல இதழ்களைஉடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள், பாடு ஒல்லா- இமைபொருந்துதலைச் செய்யா வாயின; காம நோய் அது கொல் - காம நோய் என்பது அத்தன்மைத்தோ?
(முடிபு) தோழி, புலம்பன் பிரிந்தெனக் கண்பாடொல்லா; காம நோய் அது கொல்.
(கருத்து) தலைவன் பிரிவினால் யான் துயில் ஒழிந்தேன்.
(வி-ரை.) அதுவென்றது கண் உறங்காமையைச் சுட்டி நின்றது; செய்யுளாதலின் சுட்டிப்பெயர் முன் வந்தது (தொல்.கிளவி.39.)தோழி:விளி. காமநோயே: ஏ, அசை. குருகு பகலிலும் இரவிலும் தங்குதற்குரியதாகலின் 'வதி குருகுறங்கும் புன்னை' என்றாள். இயல்பாகவே தங்குவதற்குரியதாயினும் அதன் நிழல் உறக்கத்தையும் உண்டு பண்ணுவதாதலின், 'இன்னிழற்புன்னை' என்றாள். உடைதிரை- முரி ‘‘கின்ற திரை; உடைதிரை முத்தஞ் சிந்த’’ (சீவக.2652.) தீ நீர்ப் புலம்பு, மெல்லம்புலம்பு என்க; தீமை-இனிமை; புலம்பு- கடற்கரை. மருதமும் நெய்தலும் மென்