பதுமனார். (பி-ம்.) 2 ‘முனிவின்றி’ 4 ‘ஓஒயான் ‘ஓரியான்’.
(ப-ரை.) யாமம் நள்ளென்றன்று- இடையிரவு செறிந்த இருளை உடையதாக இரா நின்றது; மாக்கள் சொல் அவிந்து இனிது அடங்கினர்-மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர்; நன தலை உலகமும் முனிவின்று துஞ்சும்-அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லாஉயிர்களும் வெறுப்பின்றித் துயிலா நிற்கும்; ஓர்யான் மன்ற துஞ்சாதேன்-யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனாயினேன்.
(முடிபு) யாமம் நள்ளென்றன்று; மாக்கள் அடங்கினர்; உலகமும் துஞ்சும்; யான் ஒருத்தியே துஞ்சாதேன்.
(கருத்து) யாவரும் துயிலும் நள்ளிரவிலும் யான் துயின்றிலேன்.
(வி-ரை.) நள்: நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு; செறிவின்கண் வந்ததென்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். பதி. 41); நள்ளென்னும் ஓசையை