பக்கம் எண் :

குறுந்தொகை


19


(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)
 7.   
வில்லோன் காலன கழலே தொடியோள் 
    
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் 
    
யார்கொ லளியர் தாமே யாரியர்  
    
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி  
5
வாகை வெண்ணெற் றொலிக்கும் 
    
வேய்பயி லழுவ முன்னி யோரே 

என்பது செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டோர் கூறியது. (பி-ம்.கண்டோர் செவிலிக்குச் சொல்லியது).

    (செலவு -உடன்போக்கு, இடைச்சுரத்து- பாலைநிலத்து வழியினிடையே).

பெரும்பதுமனார்.

     (பி-ம்.) 2. ‘மேலன’, ‘மேவுந;’ 4. ‘கயிறாள் பறையிற்;’ 6. ‘வேய்பயில் பழுவம்’.

    (ப-ரை.) ஆரியர் கயிறு ஆடு பறையின் -ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையைப் போல, கால் பொர கலங்கி- மேல் காற்றானது தாக்குதலால் நிலை கலங்கி,வாகை வெள் நெற்று ஒலிக்கும்- வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுக்கள் ஒலித்தற்கு இடமாகிய, வேய்பயில் அழுவம்-மூங்கில்செறிந்த பாலை நிலப் பரப்பில், முன்னியோர்-கடந்து செல்ல நினைந்துவருபவர்களுள், வில்லோன் காலன கழல்-வில்லை உடையவனாகியஇவ்வாடவனது காலில் உள்ளன வீரக் கழல்கள்; தொடியோள் மெல் அடிமேலவும் சிலம்பு-தோள் வளையை அணிந்த இம்மகளினுடையமெல்லிய அடியின் மேலுள்ளனவும் சிலம்புகள்; நல்லோர் யார் கொல்-இந்நல்லோர் யாவரோ? அளியர்-இவர் அளிக்கத் தக்கார்!

    (முடிபு) அழுவம் முன்னியோர் யார் கொல்? அளியர்!

    (கருத்து) மணம் புரிந்து கொள்ளாத இவர் திறம் இரங்கத் தக்கது.

    (வி-ரை.) உடன்போக்கின்கண் நேரும் இடையூறுகளை நீக்கற் பொருட்டு வில்லுடையனாதலின் தலைவனை வில்லோனென்றார்;உதயணன் வாசவத்தையைக் கொண்டு செல்லுகையில் வராகன்