சிறந்தார் அவராகலின் அவரே பொருளாயினார் என்பது (தொல். செய். 203, பேர், 202, ந; இ.வி. 575); சுரத்திடைச் செல்லும் தலைமகனையும் தலைமகளையும் கண்டு எதிர்வருகின்றார், யார்கொல் இவ்வாறு போந்தார் எனச் சொல்லியது (இறை.23); இடைச்சுரத்துக் கண்டோர் கூற்று (தொல்.அகத். 43, இளம், 40, ந.); சுரத்து எதிர்ப்பட்டார் சொல்லியது (தமிழ்நெறி.23); கண்டோர் அயிர்த்தல் (நம்பி.182.)
ஒப்புமைப் பகுதி1. கழல்: "ஆய்கழற், சேயிலை வெள்வேல் விடலை’’ (குறுந். 15:4-5.) 2. மெல்லடி: "நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள்’’ (தொல். அகத். 40, ந. மேற.) தலைவி சிலம்புடையளாதல்: "பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி, சிலம்புகெழு சீறடி சிவப்ப, இலங்குவேற் காளையொ டிறந்தனள் சுரனே’’ (தொல்.அகத். 40, ந. மேற.்) சிலம்புகழி நோன்பு: "சிலம்பு கழீஇய செல்வம்’’ (நற்.289:10); "அருங்கடிவியனகர்ச் சிலம்புங் கழியாள் ...கூர்வேல் விடலையொடு பொய்ப்பப்போகி’’, "சிலம்புகழீஇ அறியாத் தேஎத்த ளாகுதல் கொடிதே’’ (அகநா.315:8-14, 385:17-18.)
4-5. காற்றால் வாகையின் நெற்று ஒலித்தல்: ‘’வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென, நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்’’, "அத்த வாகை யமலை வானெற், றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக், கோடைதூக்குங் கானம்’’ (குறுந்.39:1-2, 369:1-3); "காய்த்த வாகை நெற்றொலிப்ப’’(திவ்.பெரியதிரு.1:7-8) வாகை நெற்றின் ஒலிக்குப் பறையின் ஒலி உவமை:"வாட லுழிஞ்சில் விளைநெற் றந்துணர், ஆடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக், கோடை நீடிய வகன்பெருங் குன்றம்’’, "உறுவளி யெறிதொறும்.... குறுங்காலுழிஞ்சிற், றாறுசினை விளைந்த நெற்ற மாடுமகள், அரிக்கோற் பறையி னையென வொலிக்கும்’’ (அகநா.45:1-3,151:6-10.)
மு. | ‘‘வில்லான் விறலடி மேலன பொற்கழல் வெண்முத்தன்ன |
| பல்லா ளிணையடி மேலன பாடகம் பஞ்சவற்கு |
| நெல்லார் கழனி நெடுங்களத் தன்று நிகர்மலைந்த |
| புல்லா தவரென யார்கொல் லருஞ்சுரம் போந்தவரே’’ |
| (பாண்டிக்கோவை) |
(7)
(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின் பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’ என்று கூறிய 8. | கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் |
| பழன வாளை கதூஉ மூரன் |
| எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் |
| கையுங் காலுந் தூக்கத் தூக்கும் |
5 | ஆடிப் பாவை போல |
| மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே. |