பக்கம் எண் :

குறுந்தொகை


03


சேவடி என்பது சினைக்குச் சினை உவமமாயிற்று’ (தொல். உவம. 6, இளம், பேர.்); ‘தாமரை ... சேவடி யென்றவழி நான்கு சொல்லாகி ஓசை பெற்று நின்றவாறு கொள்க; அவை ஈரசை யென்று கொள்க’ (தொல். செய். 11, இளம்.); ‘தாமரை .. .. .. சேவடியென்பது பதினோரெழுத்தான் வந்தது’(தொல். செய். 49, இளம்.); ‘தாமரை என்பது தாமரைப் பூ என்றவாறு; இது முதலில் கூறும் சினையறி கிளவி; தாமரை ... சேவடி யென்றாற் போல வெனக் கொள்க’ (யா.வி.சிறப்.); ‘தாமரை ... சேவடி என அதன் சினையை உணர்த்தின் ஆகுபெயராம்’(நன்.289; மயிலை; 290, சங்.); ‘தாமரை ... சேவடி ... என்றாற் போல்வன முதற்பொருளை உணர்த்தும் பொருட் பெயரான் அவற்றின் ஒரு வழி உறுப்பாகிய சினைப் பொருளைக் கூறின’ (இ.வி.192.)

     3. “குன்றி யேய்க்கு முடுக்கையென் றாற்கரி, தென்று மோசிவப் பென்றுமோ வவ்விரண், டொன்றி நின்றவென் றோதுது மோவெனின், நின்ற தோர்வர லாற்றொடு நிற்குமே” (யா.வி.95, உரை, மேற்.)

     3-4. ‘குன்றின் ... வேலென்புழிப் போல நெஞ்சென்றது ஈண்டும் 1. அகப்பொருட்டாய் நின்றது’ (குறள், 1250, பரிமேல்.); ‘குன்றின் ... வேலென்பது போலக் கல்லுக்கு நெஞ்சு கூறினார் என உணர்க’ (தஞ்சை.331, சொக்க.); ‘குன்றின் ... வேலென்றாற்போல உரம் என்றது ஈண்டு இடப்பொருட்டாய் நின்றது’ (திருமயிலையமக அந்தாதி, 11.)

     5. ‘சொல்லுவான் குறிப்பு முருகவேளை நோக்குதலின் சேவல் கோழியாயிற்று’ (தொல். கிளவி. 53, தெய்வச.்)

     5-6. ‘ஈற்றடியிரண்டும் மகார வகாரங்கள் எதுகையாய் வந்தன (யா.வி. 53.)

     முற்றும்: ‘இதனுட் குறித்த பொருள்: முருகவேள் காப்ப உலகம் காவற்பட்டது என்னும் பொருள். இதனை முடித்தற்பொருட்டு 2. எழுத்து முதலாகி வந்து ஈண்டிய அடிகள் எல்லாவற்றானும் நாட்டியவாறு கண்டு கொள்க’ (தொல். செய். 74, இளம்.); ‘என்பது ஆறடியான் வந்தது’ (தொல். செய். 158, பேர்.); ‘என்பது 3. முன்னமின்றி வந்தது’ (தொல். செய். 211, பேர்,ந.); ‘இதனுட் பொழிப்பெதுகையும் ஒரூஉ எதுகையும் ஒரூஉ மோனையும் பிறிதும் வந்தனவாயினும் முதல் வந்ததனாலே பெயர் கொடுத்துப் பொழிப்பெதுகைச் செய்யுள் என்று வழங்கப்படும்’ (யா.வி. 53); ‘இஃது எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள்’ (யா.கா. ஒழிபு.9.)

     ஒப்புமைப் பகுதி 1. மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி” (நன். 155, மயிலை. மேற்.)

     2. பவழத்தன்ன மேனி: “செய்யன்” (முருகு. 206); “உருவு முருவத்தீ யொத்தி” (பரி. 19:99.) திகழொளி: “ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி” (முருகு.3.)

 1.  
அகம் - இடம்
 2.  
எழுத்து, ஆசை, சீர், தொடை முதலியன ஈண்டிய அடி.
 3.  
முன்னம். தொல்: செய். 207, பேர். பார்க்க.