பக்கம் எண் :

குறுந்தொகை


04


     3. “சிவந்த ஆடையன்” (முருகு. 206); “உடையு மொலியலுஞ் செய்யை” (பரி. 19:97)

     3-4. குன்றின் நெஞ்சு பக எறிந்தது: “குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து” (முருகு. 266); “தெவ்வுக் குன்றத்துத் திருந்துவே லழுத்தி, அவ்வரை யுடைத்தோய்” (பரி.19:102-3); “வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேற், றிகழ்பூண் முருகன்” (தொல். களவு.23, ந.மேற்: ‘பையுண் மாலை’); “கடல் வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங், கவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல், நெடுவேள்” (சிலப்.23:189-90): “அருவரை பிளந்த வஞ்சுவரு நெடுவேல்” (பெருங். 2.5:147). குன்றின் நெஞ்சு: “விஞ்சையம் பெருமலை நெஞ்சகம் பிளந்து” (பெருங். 1.51:8.)

     4. (பி-ம்.) செஞ்சுடர் நெடுவேல்: “செவ்வேற் சேஎய்” (முருகு.61); “செவ்வா யெஃகம்” (பதிற். 11:7); “அமையா வென்றி யரத்தநெடு வேலோய்” (கல்.கடவுள. 2:15).

     5. சேவலங் கொடியோன்: “கோழி யோங்கிய வென்றடு விறற் கொடி”, “புகரில் சேவலங், கொடியன்” (முருகு.38, 210-11.)

     6. எய்தின்று: குறள்,1240.

  
(பாங்கியிற் கூட்டத்தை விரும்பிய தலைமகன் செங்காந்தள் பூவைக் கையுறையாகக் கொடுத்துத் தோழியின்பால் தன் குறை கூறிய வழி அவள், “இஃது எமது மலையிடத்தும் உள்ளதாதலின் இதனை வேண்டேம்” என்று மறுத்துக் கூறியது.)
 1.   
செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த  
    
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்  
    
கழறொடிச் சேஎய் குன்றம் 
    
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 

என்பது தோழி கையுறை மறுத்தது.

    (கையுறை -கையின் கண்ணே சேர்ப்பது.)

திப்புத் தோளார் (பி-ம். தீப்புத் தேளார்.)

     (பி-ம்.) 3. ‘கழறொடீஇ’

    (ப-ரை.) வெற்ப, செங்களம் பட-போர்க்களம் இரத்தத்தால் செந்நிறத்தை உடைய களமாகும்படி, அவுணர் கொன்று தேய்த்த - அசுரர்களைக் கொன்று இல்லை ஆக்கிய, செ கோல் அம்பின் - இரத்தத்தால் சிவந்த திரண்ட அம்பையும், செகோடு யானை - சிவந்த கொம்பினை உடைய யானையையும், கழல் தொடி - உழல இட்ட வீர வளையையும் உடைய, சேஎய் குன்றம் - முருகக்