பக்கம் எண் :

குறுந்தொகை


05


கடவுளுக்குரிய இம் மலையானது, குருதிப் பூவின் குலை காந்தட்டு - சிவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளை உடையது.

     (முடிபு) சேயினது குன்றம் காந்தட்டு.

     (கருத்து) காந்தள் பூவால் குறைவிலேமாதலின் நின் கையுறையை ஏலேமென்றபடி.

     (வி-ரை.) வெற்பவென்னும் விளி முன்னத்தால் வருவிக்கப்பட்டது (தொல். செய்.207.) கொன்று - வருத்தி எனவுமாம்; “கரும்புபோற், கொல்லப் பயன்படுங் கீழ்”(குறள்,1078.) தேய்த்த - இல்லையாக்கின (முருகு. 69,ந.) கொன்று தேய்த்த வென்க; தேய்த்த சேயென்க. செங்கோலம்பு: செம்மை வளைவு இன்மையுமாம்; ‘அம்பு வடிவாற் செவ்விதாயினும்’ (குறள்.279, பரிமேல.்) முருகக் கடவுளுக்கு அம்பு உண்மை, “பொறிவரிச் சாபமும்” (பரி.5:65) என்பதனால் பெறப்படும். செங்கோடு - பகைவரைக் குத்திச் சிவந்த கொம்பு.

     முருகக் கடவுளின் ஊர்திகளுள் யானை ஒன்றென்பதும், அதன் பெயர் பிணிமுகம் என்பதும், அருள் செய்வதற்கும் போர் செய்வதற்கும் எழுந்தருள்கையில் அதனை அவர் ஊர்ந்து செல்வார் என்பதும் “வேழமேல் கொண்டு”, “அங்குசங் கடாவ வொருகை”, “ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி” (முருகு.82, 110, 247), “கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு” (பதிற்.11:6), “சேயுயர்பிணிமுக மூர்ந்தம ருழக்கி” (பரி. 5:2) என்பவற்றாலும் அவற்றின் உரைகளாலும் அறியலாகும்.

     கழறொடியென்றாள், “கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்பவொருகை” (முருகு.114) என்று கூறுதலின். கழறொடி - உழலுந்தொடி (சிறுபாண். 95, ந.) சேஎயென்றது அளபெடுத்த வழியும் விளியன்றி நின்றது, “செவ்வேற் சேஎய், சேவடி” (முருகு. 61-2) என்புழிப்போல. குருதிப்பூவின் குலைக் காந்தள் என்றது முதற்கேற்ற அடையடுத்து நின்றது; “குவிமுகி ழெருக்கங் கண்ணி” (குறுந். 17:2), “உளைப்பூ மருதி னொள்ளி ணர்” (முருகு. 28), “நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர்” (சிலப்.14:89) என்ற இடங்களிற்போல. குருதி - சிவப்பு. வெண் காந்தளும் உண்மையின் குருதிப்பூவென்றாள்; குருதிப் பூ - இரத்தம் போன்ற நிறத்தை உடைய பூவெனினும் ஆம். கொத்தாகவே பூத்தலின் குலைக் காந்தள் என்றாள்.

     (மேற்கோளாட்சி) 3-4. ‘குன்றங் ... காந்தட்டு: என்புழி யாம் காந்தட் பூவாற் குறைவிலமெனப் பின்னும் கூற்று, சொல்லெச்சமாய் நிற்குமாறு உணர்க’ (தொல். எச்ச.45,ந.)

    மு. ‘செங்களங் ... காந்தட்டே: இது தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’ (தொல். களவு. 23, ந.); ‘இதனுள் 1. பலவடியும் வந்தவாறு காண்க’, ‘இதனுள் எழுத்து அளவு மிகாமல் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஓசையால் ஆசிரியம் வந்தவாறு காண்க’ (தொல். செய். 50,76, இளம்); ‘செங்களம் ... காந்தட்டே: எனச் செய்யுள் முடிந்த வழியும் இவற்றால் யாம் குறையுடையேம் அல்லேமென்று தலைமகற்குச்

 1.  
பலவடி யென்றது ஐந்து வகைக் கட்டளை அடிகளை.