சொன்னாளேல் அது கூற்றெச்சமாம்; என்னை? அவ்வாறு கூறவும் சிதைந்தது இன்மையின். தலைமகட்குச் சொன்னாளேல் அது குறிப்பெச்சம்; என்னை? அது காண்பாயாகிற் காணெனத் தலைமகளை இடத்துய்த்து நீங்கிய குறிப்பினளாகிஅது தான்கூறாளாதலின் என்பது’ (தொல்.செய். 206 பேர்.); ‘இக் காந்தளால் யாம் குறையுடையம் அல்லம் எனத் தலைவற்குக் கூறிற் கூற்றெச்சமாம், அக் கூற்றும் செய்யுட்குச் சிதை வின்மையின்; அது காண்பாயாகிற் காணெனத் தலைவியை நோக்கி இடத்துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம்; அவனைக் கூடுகவெனத் தான் கூறாளாகலின்’ (தொல்.செய்.206, ந; இ.வி.581);’ 2. தலைமகனது வரவு உணர்ந்து தோழி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு சென்று, யான் செங்காந்தட்பூக் கொய்துகொடு வருவல்; அவ்விடம் தெய்வ முடைத்து; நின்னால் வரப்படாது; நீ அவ்வளவும் இப் பொழிலிடத்தே நில்: என்று நிறீஇ நீங்குவதற்குச் செய்யுள்’ (இறை. 18; நம்பி.149); ‘தோழி தலைமகளைக் குறிவயின் நிறுத்திப் பெயர்ந்தது’ (தமிழ்நெறி விளக்கம், 17); ‘இஃது அளவடியானும் அகவல் ஓசையானும் வந்த நேரிசை ஆசிரியப்பா’ (யா.கா. செய்.2); இந்தப் பாட்டில் கூற்றெச்சமும் குறிப்பெச்சமும் வந்தன’(கல். ‘வானவர்க்கிறைவன்’ மயிலேறும்.)
ஒப்புமைப் பகுதி 1. செங்களம்: “செங்களம் வேட்டு” (பதிற். 4-ஆம் பத்துப் பதிகம், 11); “செங்களந் துழவுவோள்” (புறநா. 278:7); “தேன்மிடைந்த தாரினான் செங்களஞ் சிறந்ததே” (சீவக. 279); “செங்களத்து மறங்கருதி”, “செங்களத்துச் செழுஞ்செல்வம்” (பு.வெ.127,207).
அவுணர்த்தேய்த்தல்: “செறுநர்த் தேய்த்த”, “பொருநர்த் தேய்த்த”, “செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கி” (முருகு. 5, 69, 99.)
2. செங்கோலம்பு: “செங்கோ லம்பினர்” (அகநா. 337:13). செங்கோட்டியானை: “புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின், தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்த”, “தொன்றுறை துப்பொடு முரண்மிகச் சினைஇக், கொன்ற யானைக் கோடுகண் டன்ன, செம்புடைக் கொழுமுகை யவிழ்ந்த காந்தள்” (நற்.39:5-6, 294: 5-7); “பொருதிகல் புலிபோழ்ந்த பூநுத லெழிலியானைக் குருதிக்கோட்ட டழிகறை தெளிபெறக் கழீஇயின்று”(பரி: 20:4-5); “மறமிகு வேழந்தன் மாறுகொண் மைந்தினாற், புகர்நுதல் புண்செய்த புய்கோடு போல, உயர்முகை நறுங்காந்தணாடோறும் புதிதீன” (கலித். 53:3-5.)
3. கழறொடி: “கழறொடி யாஅய்” (குறுந். 84:3; புறநா.128:5) “கழறொடித்தடக்கை” (புறநா.91:2) தொடிச்சேய்: “தொடியணி தோளன்” (முருகு.211.)
2. | இக் கருத்துக்கு உரியவனாக, ‘‘ அஞ்சிறை வண்டறை காந்தளம் போதுசென்றியான்றருவேன், பஞ்சுறை தேரல்கு லாய்வரற் பாற்றன்று பாழியொன்னார், நெஞ்சுறை யாச்செற்ற வேன்மன்ன னேரி நெடுவரைவாய், மஞ்சுறை சோலை வளாய்த்தெய்வ மேவும் வரையகமே’’, ‘‘ நீவிரி கோதையிங் கேநின்னின் னால்வரற் பாலதன்று, தீவிரி காந்தள்சென் றியான்றரு வேன்றெய்வ மங்குடைத்தாற், பூவிரி வார்பொழிற் பூலந்தை வானவன் பூவழித்த, மாவிரி தானையெங் கோன்கொல்லி சூழ்ந்த வரையகமே’’ (பாண்டிக் கோவை) என்னும் செய்யுட்களும் இறையனாரகப் பொருளுரையில் காட்டப் பெற்றுள்ளன. |