பரணர். (பி-ம்.) 5. ‘ஞான்றே’.
(ப-ரை.) மகிழ்நன் - தலைவன், மயங்கு மலர் கோதை குழைய - விராவிய மலரையுடைய நின் மாலை குழையும்படி,முயங்கிய நள் - அணைந்த நாட்கள், தவ சில - மிகச் சிலவாகும், அலர் - பழிமொழியோ, கூகை கோழி - கோட்டானாகிய கோழியையுடைய, வாகை பறந்தலை - வாகை யென்னுமிடத்துள்ள போர்க்களத்தில், பசு பூண் பாண்டியன்வினை வல் அதிகன் - பசிய பூணையணிந்த பாண்டியனதுஏவலிலே வல்ல அதிகன், களிறொடு பட்ட ஞான்றை - தனது யானையோடு பட்ட காலத்தில், ஒளிறு வாள் கொங்கர்ஆர்ப்பினும் பெரிது - விளங்குகின்ற வாட்படையையுடைய கொங்கர்களுடைய வெற்றியாலுண்டாகிய ஆரவாரத்தினும் மிக்கது.
(முடிபு) மகிழ்நன் முயங்கிய நாள் சிலவே; அலர்ஆர்ப்பினும் பெரிது.
(கருத்து) அலர் மிக்கது.
(வி-ரை.) கோதை: தலைவி யணிந்தது. கோதை குழைய முயங்குதல் முயக்கத்தின் செறிவை உணர்த்தியது. சிலவே: ஏ பிரிநிலை. அலரே:ஏ அசை நிலை.
கோழியிருந்து கூவ வேண்டிய விடத்துக் கூகை கூவிற்றாதலின்கூகைக் கோழி யென்றார்;
“கூகைக் கோழி யானாத் தாழிய பெருங்காடு” (புறநா. 364:12-3); கூகையொடு சேர்ந்த காட்டுக் கோழி யென்பதும் பொருந்தும்.
வாகைப் பறந்தலையை, “சூடா வாகைப் பறந்தலை” (அகநா. 125:19) என்று பிறவிடத்தும் இவ்வாசிரியரே கூறுவர். வாகை யென்பது ஓரூர்ப்பெயர் போலும்.
அதிகன் பசும்பூட் பாண்டியனுடைய அதிகாரிகளுள் ஒருவன்; இச்செய்தி; பரணர் பாடிய, “கொளக்குறை படாஅ” (அகநா. 162) என்னும்பாட்டிற் குறிப்பிக்கப்பெறும்.