(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை) (பி-ம்.) 4. ‘யாவது மதியிற்’, ‘அரவுறுமதியிற்’, ‘மதியிற்கிவறோர்’;5. ‘களையல’, ‘கண்ணின்றுபடீஇ; ‘படீஇ’; 6. ‘அஞ்சேல்’; 8. ‘யாங்காவாவதுவை, யாங்காவாவது ’.
(ப-ரை.) நெஞ்சு நிறை ஒல்லாது - என் நெஞ்சம் நிறுத் தலைச் செய்ய இயலாது; அவர் - அத்தலைவர், அன்புஇன்மையின் என்பால் அன்பின்மை காரணமாக, அருள்பொருள் என்னார் - அருளைப் பொருளென்று கருதாராயினர்;வன்கண் கொண்டு வலித்து வல்லுநர் - வன்கண்மையைமேற்கொண்டு என்னை வற்புறுத்தி அவ்வற்புறுத்தலில்வன்மையைப் பெற்றோர், அரவு நுங்கு மதியினுக்குஇவணோர் போல - அரவினால் உண்ணப்படும் சந்திரன்திறத்தில் இவ்வுலகத்திலுள்ளோர் செயல்போல, களையார்ஆயினும் - எனது துன்பத்தை நீக்காரானாலும், இனிதுகண்படீஇயர் - இனிமையாகக் கண்படுகின்றனர்; அஞ்சல்என்மரும் இல்லை - அஞ்சற்க வென்று கூறி நம்மைத்தேற்றுவாரும் இங்கே இல்லை; ஆதலின், ஆங்கு அவர்வதிவயின் - அங்கே அத்தலைவர் தங்குமிடத்திற்கு,நீங்கப்படின் - நாம் நீங்கிச் சென்றால், நாண் அளிது - நம்நாணம் இரங்கத்தக்கது; அஃது அழியும்.
(முடிபு) நெஞ்சு நிறை ஒல்லாது; அவர் அருள்பொருள் என்றார்; வலித்து வல்லுநர் கண் இனிது படீஇயர்; அஞ்சலென்மரும் இல்லை; நீங்கப்படின் நாண் அளிது.
(கருத்து) நாம் தலைவர் உள்ள இடத்திற்குச் செல்வேமாக.
(வி-ரை.) நிறை - நிறுத்தல்; காமத்தை ஆற்றி நிறுத்தல்; அங்ஙனம் நிறுத்தல் கூடுமெனின் தலைவி ஆற்றுவாள்; அது கூடாமையின் ஆற்றாளாயினள். அவர்: நெஞ்சறி சுட்டு. அன்பு இன்மையின் அருளும் இலதாயிற்று; அன்பு விரிந்து அருளுண்டாதல் இயல்பு (குறுந். 20:1.)