பக்கம் எண் :

குறுந்தொகை


700


     மேற்கோளாட்சி மு. தோழி தலைவியைத் தலைவனிடம் ஓம்படுத்துக் கூறியது (இறை.23); தலைவற்குத் தோழி, தலைவியைப் பாதுகாத்துக் கொள்ளென்று கூறியது(தொல். களவு. 23, ந.); பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தது (நம்பி. 182.)

    (குறிப்பு) நச்சினார்க்கினியர் கருத்து சிறப்புடையது.

     ஒப்புமைப் பகுதி 3. மு. நற். 15:3.

     4-5. தாய் அலைப்பினும் குழவி அவளையே நாடுதல்: “குழவி,அலைப்பினு மன்னேயென் றோடும்” (நான்மணி. 25); “தருதுயரந் தடாயேலுன் சரணல்லாற் சரணில்லை, விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் வித்துவக்கோட் டம்மானே, அரிசினத்தா லீன்றதா யகற்றிடினு மற்றவடன், அருணினைந்தே யழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே” (பெருமாள்.5:1.)

    6. தலைவன் இன்னா செய்தல்: குறுந். 288:3-4, 309:7.

    7. பி-ம். நின்னலதிலள்: (குறுந். 115:6); “புன்னையம் பூங்கானற்சேர்ப்பனைத் தக்கதேர், நின்னல்ல தில்லென் றுரை” (ஐந். எழு.58.) 8. விழுமங் களைதல்: நற். 216:3-4.

(397)
  
(தலைவனது பிரிவைத் தலைவிக்கு உணர்த்திய தோழி, “உலகிலுள்ள மகளிர் தம் தலைவர் வினைமுடித்து வருமளவும் ஆற்றியிருப்பார்” என்று உலகின்மேல் வைத்துக்கூறி, “நீ ஆற்றல் வேண்டும்” என்பதை அறிவுறுத்தினாளாக, “நம்மை அறிவுறுத்துவாரையன்றி நம்துயரைப் போக்குவாரைக் கண்டிலேம்” என்று தலைவி கூறியது.)
 398.    
தேற்றா மன்றே தோழி தண்ணெனத்  
    
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக்  
    
கயலே ருண்கட் கனங்குழை மகளிர்  
    
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய  
5
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை  
    
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு  
    
மெய்ம்மலி யுவகையி னெழுதரு  
    
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே.  

என்பது பிரிவுணர்த்திய தோழி, தலைமகன் பிரிந்து வினைமுடித்து வருந் துணையும் ஆற்றியுளராவரென்று உலகின்மேல் (பி-ம். உலகியல்மேல்)வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.

பாலைபாடிய பெருங் கடுங்கோ.

     (பி-ம்.) 1. ‘செற்றாமன்றே’; 2. ‘துற்றுந்’, ‘திவலைத்’; 4. ‘கையுறை’;‘சுடர்துயி லெடுப்பும்’; 7. ‘மெய்வலி’; 8. ‘கண்கலிழுங்குபனி’.

    (ப-ரை.) தோழி--, தண் என - குளிர்ச்சி உண்டாகும்படி, தூற்றும் துவலை - தூவுகின்ற மழைத் துளியையுடைய,