உவகையின் எழுதரு கண்பனியென்று கூட்டி உவகையினால்எழுந்த இன்பக் கண்ணீரென்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும்(சீவக. 1043.)
ஒப்புமைப் பகுதி 1-2. வாடை துயர்தருதல்: குறுந். 103:4, ஒப்பு.
3. கனங்குழை: குறள், 1081.
4-5. நெய் பெய்து மாட்டிய சுடர்: “நெய்சொரிந்து, பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி” (நெடுநல். 102-3.)
3-5. மகளிர் மாலையில் விளக்கேற்றுதல்: “மங்கையர், நெய்யுமிழ்சுரையர் நெடுந்திரிக் கொளீஇக், கையமை விளக்க நந்துதொறுமாட்ட” (முல்லைப். 47-9); “மாலை... இனியோள், மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே” (நற். 3: 6-9); “எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப, மல்லன் மூதூர் மாலைவந் திறுத்தென”, “மாலை மணிவிளக்கங்காட்டி யிரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங்கொள்ள” (சிலப். 4:19-20, 9: 3-4); “பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப” (மணி. 5:134); “அகினா றங்கை சிவப்ப நல்லோர், துகிலின் வெண்கிழித் துய்க்கடைநிமிடி, உள்ளிழு துறீஇய வொள்ளடர்ப் பாண்டிற், றிரிதலைக் கொளீஇ யெரிதரு மாலை” (பெருங். 1.33:91-4.)
6. தலைவர் வந்தாரென்று தலைவியர் விருந்தயர்தல்: குறுந். 33,வி-ரை; 155:6, ஒப்பு.
7. மெய்ம்மலி யுவகை: நற். 43:7; கலி. 40:32; அகநா. 262: 12-3, 272:2; புறநா. 45:9.
8. கண்பனி அரக்குதல்: “பெருமதர் மழைக்கண் வருபனியரக்கி”, “வடிவே லுண்கண் வருபனி யரக்கி” (பெருங். 1.33:136, 36:99.)
(398)
(வரைவு நீட்டித்த காலத்துத் தலைவி தோழியை நோக்கி, “தலைவர் உடனுறையின் நீங்கியும் பிரியின் ஒன்றியும் நிற்கின்றது பசலை” என்றுகூறியது.) 399. | ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க |
| பாசி யற்றே பசலை காதலர் |
| தொடுவுழித் தொடுவுழி நீங்கி |
| விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. |
என்பது வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரணர். (பி-ம்.) 1. ‘யுண்டுறை தொக்க’; 4. ‘வி்டுவுழி பரத்தலானே’.
(ப-ரை.) தோழி, பசலை - பசலையானது, காதலர் - தலைவர், தொடுவுழி தொடுவுழி - நம்மைத் தீண்டுந்தோறும்,