பக்கம் எண் :

குறுந்தொகை


707


    ஒப்புமைப் பகுதி 1. அடும்பின் ஆய்மலர்: “ஆய்பூ வடும்பி னலர்” (கலி. 144:30.)

    2. நீர்வார் கூந்தல்: குறுந். 294:1.

    3. ஓரை மகளிர்:குறுந்: 48:3, ஒப்பு.

    1-3. மகளிர் அடும்பின் மலரை அணிதல்: “மாக்கொடி யடும்பின் மாயித ழலரி, கூந்தன் மகளிர் கோதைக் கூட்டும்” (நற். 145: 2-3); “அடும்பி னலர்கொண் டுதுக்காணெம், கோதை புனைந்த வழி”(கலி. 144: 30-31.)

    மகளிர் நெய்தற்றொடை யணிதல்; “நெய்தற் பூவுட னெறிதரூஉத் தொடலை, தைஇ” (நற். 96: 7-8); “கடலாடு மகளிரும், நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார், உடலகங் கொள்வோ ரின்மையிற், றொடலைக் குற்ற சிலபூ வினரே” (ஐங். 187: 2-5.)

    6. ஐதேகம்ம: நற். 52:11, 240:1.

    மெய்தோய் நட்பு: குறுந். 61:4,247:7.

     தலைவனது நட்பு: குறுந். 247: 6-7, ஒப்பு.

(401)

குறுந்தொகை முற்றும்

இத்தொகை முடித்தான் பூரிக்கோ.

இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்.

இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும்

1. எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது.

  
 1. 
307, 391 ஆம் செய்யுட்கள் மட்டும் ஒன்பதடிகளை
யுடையனவாகக் காணப்படுகின்றன.