பக்கம் எண் :

குறுந்தொகை


08


தையே சொல்வாயாக: நீ அறியும் பூ - நீ அறியும் மலர்களுள், பயிலியது கெழீஇய நட்பின் - எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் இயல் - மயில் போன்ற மென்மையையும், செறி எயிறு - நெருங்கிய பற்களையும் உடைய, அரிவை கூந்தலின் - இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறியவும் - நறுமண முடைய பூக்களும், உளவோ - உள்ளனவோ?

     (முடிபு) தும்பி, நீ அறியும் பூக்களுள் அரிவையின் கூந்தலைப் போல நறியனவும் உளவோ? மொழிவாயாக.

     (கருத்து) தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது.

     (வி-ரை.) தும்பி சொல்லும் ஆற்றல் இலதாயினும் உள்ளதுபோல, “சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்” (தொல். பொருள். 2) என்ற விதிப்படி உவகை பற்றிக் கூறியது. கொங்கு - தேனுமாம்; முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது, கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்” (சிறுபாண். 184-5, ந.)அம் சிறை - அழகிய சிறையுமாம்; “அம்ம வாழியோ வணிச்சிறைத் தும்பி” (குறுந்.392:1). தும்பி - உயர்ந்த சாதி வண்டு. மணத்தைப் பற்றிக் கூறுதலின் நன் மணத்திற் செல்லும் தும்பியை நோக்கிக் கூறினான் (சீவக.892, ந). செப்பென்பதைத் திசைச் சொல் என்பர் நச்சினார்க்கினியர். கண்டது - அறிந்தது. மோ: முன்னிலையசை. பயிலாத பொருட்கண் அருவருப்புத் தோன்றுதற்கு ஏதுவாகிய பயிர்ப்பென்னும் குணம் உடையளாதலின், பயிலியது கெழீஇய நட்பென்றான். மயிலியல், செறியெயிறு என்னும் அடைகளும் உடம்படு புணர்த்தும் வாயிலாக இரண்டு இயல்புகளை விளக்கின; “முறிமேனி முத்த முறுவர் வெறி நாற்றம், வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு” (குறள்,1113) என்பதையும், ‘பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது’ (பரிமேல்.) என்னும் அதன் உரையையும் பார்க்க. அரிவை என்றது பருவம் குறித்தது அன்று. ஓகாரம் வினாவோடு எதிர்மறைப் பொருளது. பூ - பூக்களுள்; ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது. ஏகாரம் ஈற்றசை.

     (மேற்கோளாட்சி) 1. ‘கொங்கு ... வாழ்க்கை என்பது இளவேனி லாயிற்று, தும்பி கொங்குதேரும் காலம் அதுவாதலின்’ (தொல்.அகத்.16, ந.); அஞ்சிறை: அகம் என்பதன் முன் சிறை என்பது வரின் இடை எழுத்துக்கெடும் (நன்.222, சங்.).

     2. மோவென்பது முன்னிலையசை (தொல்.இடை.26, இளம், சே, தெய்வச், ந, கல்; நன்.439, மயிலை, 440,சங்;இ.வி. 276); செப்பென்பது சொல்லென்பதை உணர்த்தல் (நன்,457, மயிலை; 458, சங்.); ‘காமஞ்செப்பாது கண்டது மொழிமோ வென்றது என்நிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாதே கொள்ளென்றலிற் குறிஞ்சிநிலம் ஒன்றாயிற்று’ (தொல்.களவு. 2, ந.) 1-2. ‘கொங்கு ,.. தும்பியென்பது ஒன்பதெழுத்தான் வந்தது; காமஞ் ... கண்டன மொழிமோ வென்பது பத்தெழுத்தான் வந்தது’ (தொல். செய்.49, இளம.்)