பக்கம் எண் :

குறுந்தொகை


09


    மு. ‘இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல்; கண்டது மொழிமோவென்றது சொல்வழிப்படுத்தல்; கூந்தலின் நறியவு முளவோ வென்றதுநன்னயமுரைத்தல்; காமஞ் செப்பா தென்றது என்னிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாது மெய்கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது; பயிலியது கெழீஇய நட்பென்றது தம் நிலையுரைத்தல்'(தொல், களவு. 10, ந.); சொல்லாமரபின சொல்லுவனவாக உவகை பற்றிக்கூறியது (தொல். பொருள்.2,ந.); ‘கொங்குதேர் வாழ்க்கை யென்னும்பாட்டு இயற்கைப் புணாச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள், (தொல்.செய்.187, பேர.்); தலைமகளைப் புகழ்ந்து நயப்புணர்த்தியது (இறை.2); பெருநயப்புரைத்தலென்னுந் துறை (நம்பி.129;இ.வி.497); நயப்புணர்த்தியது (தமிழ்நெறி விளக்கம், 15); ‘இவ்வாசிரியத்துள் இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்தன’(யா.வி.15); நயப்புணர்த்தல் (களவியற் காரிகை,25.)

வரலாறு

     இச்செய்யுளை, ‘ஆலவாய் இறையனார் தருமி என்னும் பிரமசாரிக்குப்பொற்கிழி வாங்கிக் கொடுத்த சிந்தாசமுத்தி யகவல்’ என்று தமிழ் நாவலர்சரிதை கூறும.்

     இது, பாண்டியனால் சங்க மண்டபத்தின் முன் கட்டப்பட்டபொற்கிழியைத் தருமி என்னும் பிரமசாரி ஒருவன் பெறும் பொருட்டு ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் இயற்றி அவனுக்கு அளித்ததென்று கூறப்படும்;"பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக், கொங்குதேர் வாழ்க்கைச்செந்தமிழ் கூறிப், பொற்குவை தருமிக் கற்புடனுதவி, என்னுளங் குடிகொண்டிரும்பய னளிக்கும், கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்’’(கல்.1); "வழுத்திய மறையோன் றன்மை கண்டவன் மனத்தினாசை,ஒழித்திடு வான்வி ரும்பி யுரகமா ணிக்கச் செம்பொற், குழைக்கியை காதனங்கட் கொங்குதேர் வாழ்க்கை யென்றோர், கிழிக்கிசை கவிதை பாடிக்கொடுத்தனன் கீர்த்தி வேட்டு" (திருவால.16:10); ‘‘திருந்துசிவ முனிதருமிதளர்ந்தேன் மன்றல் செய்வான்வண் பொருளிலையென் றேத்த விங்குப்,பொருந்துமடந் தையரொடுயர் தலத்து லாவும் புகழ்மாற னணைந்தமணங்கண்டீ தென்கொல், அருந்தமிழா லிதுபொருந்தப் பாடுவாரே லளிப்பலென்றோர் பொற்கிழிநற் சபையுட் டூக்க, மருந்தனையான் கொங்கென்றோர்கவிதை பாடிக் கிழியறுப்பான் வழங்கியொப்பித் தனன்கீழ் நின்றே"(கடம்பவன புராணம், 10:17);’’தென்ன வன்குல தெய்வமாகிய,மன்னர்கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ், சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார,்இன்ன றீர்ந்தவ னிறைஞ்சி வாங்கினான்’’ (திருவிளை. தருமிக்கு.88);‘’அங்கதை யிப்பா வேந்தர்க் கறைந்தனை பெறுதி யென்று, கொங்குதேர்வாழ்க்கை யென்னுங் கோதிறூக் கீந்து விட்டான், பொங்கிய களிப்பி னானும் போய்த்தொடர் பமுதந் தன்னைத், திங்கள்வெண் குடையி னான்றன்செவிப்புலத் தூற்றி னானால்’’ (சீகாளத்தி. நக்கீர.61); ‘அப்பாலோர்வண்டை யனுப்பி னவர்காமம், செப்பாதே யென்றாற் றிகைக்குமே’’,‘தருமிக்கே, ஓர்வாழ்க்கை வேண்டி யுயர்கிழிகொள் வான்கொங்கு,தேர்வாழ்க்கை யென்றெடுத்த செய்தியும்’’ (தமிழ் விடுதூது, 108, 114-5);‘கொங்கய வன்மீ னவர்க்கு வகுத்துச் சொல் பவள- கொங்குதேர்வாழ்க்கையென்னும் கவிதையைக் கனவட்ட மென்னும் குதிரையையுடைய