vi


    திரு. ஐயரவர்கள் பொழிப்புரையோடு வெளியிட்டதைக் கழகம் அவ்வாறே இருமுறை 1952லும் 1956லும் வெளியிட்டது. அதனை மேலும் எளிதாகவும் இனிதாகவும் கற்பார் புரிந்து கற்றற்பொருட்டுப் பெருமழைப்புலவர் திரு. பொ. வே. சோமசுந்தரனார் அவர்களைக் கொண்டு பதவுரை யாக்கியும் முன்னுள்ள விளக்கங்களோடு இலக்கணக்குறிப்பும் ஆய்வுரையும் எழுதுவித்தும் இப்பொழுது கழகவழி மூன்றாம் பதிப்பாக வெளிவருகின்றது. இவற்றைச் செவ்விய முறையில் ஆக்கித் தந்த பெருமழைப் புலவரவர்கட்குக் கழகத்தின் நன்றியுரித்தாகுக.

    மாணவர் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் வாங்கிக் கற்றுங் கற்பித்தும் தமிழகவாய்மைப் பண்புணர்ந்து தூய்மையராய் நாடு மொழி நன்னெறி பீடுறப் பேணி வாழ்வாராக.

சென்னை-1 சைவசித்தாந்த நூற்பதிப்புக்17-1-1962 கழகத்தார.்