xi


    வேண்டுமென்று பெருமுயற்சி செய்து நற்றிணைக்கு உரை எழுதி முடித்தனர். இவர் 1899 ஜூலை 28 முதல் தம் வாழ் நாளளவும் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக வேலை பார்த்து வந்தவர். நீரிழிவு நோயால் மெலிந்து தளர்ந்தவர். அகநானூற்றுள்ளும் பல பாட்டுக்களுக்கும் உரை எழுதியுள்ளார். நற்றிணையையாவது உரையுடன் அச்சிட்டுக்காண அவாவினார். இவர் இறக்குமுன் நற்றிணை உரை முழுவதும் அச்சாகிவிட்டதேனும், பாடினோர் வரலாறும் பாடப்பட்டவர் வரலாறுமே பின்னர் அச்சிடப் பெறுவவாயின. இவருக்கு இரண்டு பெண்மக்கள் உளர். தம்மை வருத்திய நீரிழிவு நோய் நீங்காது, ஆனந்த ஆண்டு ஆடித்திங்கள் 15ஆம் நாள் வியாழக்கிழமை (30-7-1914) பின்னத்தூரில் தம் உரிய மனையில் நிலஉலக வாழ்வை நீத்துச் சிவன் இணையடி நீழல் அடைந்தனர்.