xiii


மிருக்கலாம். இவர் பாடியவற்றுள் அகம். 25 ஆஞ் செய்யுளொன்றுமே பாலைத் திணையாகவும் ஏனையவெல்லாம் நெய்தற்றிணையாகவுங் காணக் கிடத்தலின் இவர் நெய்தல் நிலவளத்தைச் சிறப்பித்துப் பாடுதலில் வல்லவராவர். இந்நூல் 79 ஆஞ் செய்யுளைப் பாலைத்திணையிற் பாடத் தொடங்கியவர் கிளவித் தலைவியை நெய்தனிலத்தினளாக வமைத்ததனால் இவரது ஆற்றல் பெரிதும் விளங்கும். நற்றிணையில் இவர் கூறிய உள்ளுறைகள் படிப்போர் மனத்தைக் கவர்ந்துகொள்ளுந் தன்மையவாயுள. பாண்டி நாட்டுக் கொற்கை நகரும், நடுநாட்டின் கண்ணதாகிய திருக்கோவலூரும், பெண்ணையாறும், சோழநாட்டுக் கோயில் வெண்ணியும் இவராற் பாடப்பெற்றுள்ளன. தலைமகன் காமவேட்கையால் உப்புவிற்பாளைத் தடுத்துக் கூறல் வியக்கத்தக்கது; அகம், 390 தலைமகளைப் பெற வேண்டிய தலைமகன் ஆங்கு அடிமைத்தொழில் செய்தேனும் பெறுவேமோவென்பதும் அத்தன்மையதாகும்; அகம் 280 கீழைக்கடற் கரையைச் சிறப்பித்துப் பாடும் உலோச்சனாரும் மேலைக் கடற்கரையைச் சிறப்பித்துப் பாடும் இவருமாகிய இவ்விருவரும் தமிழ்நாட்டிற்கு இருபாலும் விளங்கும் இரண்டு வளாள ஞாயிறெனவும் இரண்டு கண்களெனவும் இரண்டு இரத்தினங்களெனவுங் கூறத்தக்கவராவார். இவரியற்றினவாக நற்றிணையில் பத்து (4, 35, 79, 138, 275, 307, 315, 327, 395, 397)ப் பாடல்களும், குறுந்தொகையில் பதினொன்றும் ஐங்குறு நூற்றில் நெய்தற்பாட்டு நூறும், அகநானூற்றில் ஆறுமாக 127 பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
6. அம்மெய்யன் நாகனார்

    நாகன் என்பது இவர் இயற்பெயர்; நாகன் என்னும் பெயருடையார் பலராதலால் அவரின் இவர் வேறு என்பது தெரிய இவர் இயற்பெயருக்கு முதலில் "அம்மெய்யன்" என்னும் பெயர் புணர்த்தப்பட்டது. அம்மெய்யனென்பது தந்தையின் பெயர்போலும். முற்காலத்தில் புலவரிற் பெரும்பாலார் தந்தையின் பெயரையும் தம் பெயரோடு சேர்த்து வைத்துக் கொள்ளுதல் மரபு; ஆதித்தன் மகன் கம்பரை "அம்புநாட் டாழ்வானடி பணியுமாதித்தன், கம்பநாட் டாழ்வான் கவி" என்றாற்போல. மேல் வருவனவற்றுக்கும் இஃதொக்கும். இவர் பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் காதலியை வருணித்திருப்பது வியக்கத்தக்கது. இவர் பாடியது நற் 252 ஆம் செய்யுள்.

  
7. அல்லம்கீரனார்

    கீரன் என்னும் பெயருடையார் பலராதலால் அவரின் இவர் வேறென்பது தெரிய அல்லங் கீரனாரெனப்பட்டார். இஃது ஊர்பற்றி வந்த பெயர். அல்லம் ஓரூர். மலையாளப் பகுதியில் அல்லனமென ஓரூருளது. இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். முகம்புகு கிளவி பாடவல்லவருள் இவருமொருவர். இவர் பாடியது நற். 245 ஆம் செய்யுள்.

  
8. அறிவுடை நம்பி

    பாண்டியன் அறிவுடைநம்பி யென்பவர் இவரே புதல்வரில்லார்க்கு இருமைப் பயனு மில்லையென இவர் புறம். 188 ஆம் பாடலில் விளங்கக் கூறியுள்ளார். இவர் பிசிராந்தையாராற் பொருண்மொழிக்காஞ்சி