xiv


பாடப்பெற்றவர்; புறம். 184. தலைவியை அச்சுறுத்தித் தினைப்புனங்காவல் ஓம்புமாறு தோழி கூற்றாக இவர் பாடியது நெறியுடையதாகக் காணப்படும்; அகம். 28 இவர் நெய்தலையுங் குறிஞ்சியையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் பதினைந்தாம்பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்திலொன்றும், புறத்திலொன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
9. ஆலங்குடி வங்கனார்

    இவர் ஆலங்குடியிலுள்ள வங்கனென்னும் இயற்பெயருடையவர். இவர் பாடியவற்றுட் புறத்திணை யொன்றொழிய ஏனைய வெல்லாம் மருதத் திணையின வாதலின் மருத நிலத்துள்ள ஆலங்குடியினரெனக் கருதப் படுகின்றனர். மருதநிலத்தில் ஆலங்குடியென்று பலவூருளவாதலின் இவரூர் இன்னதெனத் துணியக்கூடவில்லை. இவர் பாடியனவெல்லாம் பெரும்பாலும் பரத்தையிற் பிரிவே; ஒவ்வொரு செய்யுளும் இனிமை தாராநிற்கும்; நற்றிணையின் 330, 400 ஆம் பாடல்களினுள்ளுறையும் அகம். 106, பரத்தை கூறுங் கூற்றும் வியக்கத்தக்கன. இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று 230, 330, 400 பாடல்களும், குறுந்தொகையில் இரண்டும், அகத்தி லொன்றும், புறத் தொன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றுமாக எட்டுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
10.ஆலம்பேரி சாத்தனார்

    இவர் மதுரையைச்சார்ந்த ஆருலவியநாட்டு ஆலம்பேரி யென்னும் ஊரிலுள்ள சாத்தனென்னும் இயற்பெயருடையவர்; ஏடெழுதுவோரின் மிகையால் வாலம்பேரி சாத்தனாரெனவுங் கூறப்படுவர். இவர் பாடலால் இவர் நெய்தனிலத்தும், பாலைநிலத்தும் நன்றாகப் பயின்றவரென்று தெரிகின்றது; நற். 152 எல்லாத் துன்பமும் மடல் முதலாயின தந்தனவென்று தலைவனொந்து கூறுங் கூற்றும், நற். 255 இல் ஆறு பார்த்துற்ற அச்சமும், நற் 303 இல் வேட்கை தாங்காது தலைமகள் இரவுறு துயரங் கூறுவதும், மிக்க சுவையுடையனவாகும்.

    மற்றும் இவர் அகம், 81 இல் கடலனது விளங்கிலென்னும் ஊரையும், அகம். 134 இல் வானவன் பிட்டன் குதிரைமலையையும், அகம் 175 இல் நெடுஞ்செழியன் போர்வென்ற திருத்தலையானங் கானத்தையும், நெவியெனன்னும் கொடையாளி யொருவனையும் பாராட்டிக் கூறியிருத்தலானே அவர்கள் காலத்தவரென்று கொள்ளலாகும். இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு 152, 255, 303, 338, பாடல்களும், அகத்தில் நான்குமாக எட்டுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
11. ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

    சாதேவன் என்பது சகதேவன் என்னும் வடசொல்லின் திரிபு. காவிதி யென்பது பாண்டிநாட்டு வேளாளரில் உழுவித்துண்டோர் அரசராற் பெறுவதொரு பட்டம். அகத்தில் இவர் பெயர் அவூர்க்கவுதமன் சாதேவன் என்று காணப்படுகிறது; புலவர் பெரும்பாலோர் தத்தம் ஊரைச் சிறப்பித்துக் கூறும் வழக்கின்படியே இவர் சேரநாட்டு ஆமூர் என்பதனைச் சிறப்பித்துக் கூறியிருத்தலின் "ஆமூர்க்கௌதமன் சாதேவனார்" என்றிருக்கவேண்டிய இவர் பெயர் ஏடெழுதுவோரின் மிகையால்