xv


ஆவூர்க்காவிதிகள் சாதேவனாரென்றெழுதப்பட்டது போலும், அங்ஙனம் ஆயின் இவர் சேரநாட்டு ஆமூரிலுள்ள கௌதம கோத்திரத்துப் பிறந்த சகதேவனென்னும் அந்தணராவர். ஆமூர் குறும்பொறையென்னும் மலையின் கீழ்பாலுள்ள பாலைநிலத்தின் கண்ணது. அதற்கேற்ப இவர் பாடல்கள் பாலைத் திணையை வருணிப்பனவாகும்; கொண்டுதலைக்கழிந்த தலைமகள் நீ அஞ்சாது கொண்டைமேற் காற்றடிக்கச் செல் என்றது சுவையுடையதாகும்; நற். 264 இவர் பாடியனவாக நற்றிணையில் 264 ஆம் பாடலொன்றும், அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
12. இடைக்காடனார்

    இவர் பெயராலேயே இவர் இடைக்காடு என்னும் ஊரினரென்று தெரிகிறது; இடைக்காடு - மலையாளப் பகுதியிலுள்ளது. இவர் பாடல்களிலெல்லாம் இடையர்களைப் பலபடியாகச் சிறப்பித்திருத்தலின் இவரும் இடையர்தாமென் றூகிக்கப்படுகின்றது. இவர் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியிருத்தலின் அவன் காலத்தினராவர்; புறம். 42 முல்லைத்திணையைச் சிறப்பித்துப் பலபடியாகப் புனைந்து பாடியுள்ளார். ஆயர் மழையில் நனைந்தபடியே ஊன்றுகோல்மேற் கால்வைத்து நின்று ஆட்டை விளிப்பது சுவையுடையது; நற். 142 அங்ஙனம் அழைப்பதுகண்டு அங்கு ஆட்டைக் கொண்டுபோகவந்து பதுங்கியிருந்த நரி அஞ்சி யோடாநிற்கும் என்றது மனத்தைக் கவருந் தன்மையது; அகம். 274 வம்பமாரியென்று தோழி தலைவியை ஏமாற்றியது வியக்கத்தக்கது; நற். 316 இவர் முயற்கண்ணுக்கு நெல்லிக்காயை உவமித்துளார்; அகம். 284 நற்றிணை 221 ஆம் பாட்டு ஒரு பிரதியில் இடைக்காடர் பாடியதெனவும் மற்றைப் பிரதிகளிலெல்லாம் இளவேட்டனார் பாடியதெனவு மெழுதியிருந்ததனால் இளவேட்டனார் பாடியதாக அச்சிடப்பட்டது; பின்னர் ஆராயுமிடத்து இளவேட்டனார் பாடியன வெல்லாம் பாலைத்திணைப் பாடலாயிருத்தலான் முல்லையே அவர் பாடிலரெனவும் இடைக்காடனாரே பாடியிருக்க வேண்டுமென்றும் கருதலாயிற்று. அதனையுஞ் சேர்க்க இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று 142, 221, 316 பாடல்களும், குறுந்தொகையிலொன்றும், அகத்தில் ஐந்தும், புறத்திலொன்றும், திருவள்ளுவ மாலையிலொன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
13. இளங்கீரனார்

    எயினந்தைமகனார் இளங்கீரனாரென்பவ ரிவரே. வினைவயிற்பிரியுந் தலைமகன் இல்லத்தழுங்கலும் இடைச்சுரத் தழுங்கலுமாகிய துறைகளை அமைத்துப் பாலைத்திணையைப் பலபடியாகப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாலைத் திணையையும் அதிலுள்ள வேடரையும் பலவாறாகப் பாராட்டிக் கூறுதலாலும், இவர் பெயர் எயினந்தைமகனா ரென்றிருத்தலாலும், இவரை அந்நிலத்திலுள்ள வேட்டுவர் மரபினரென்று கொள்ளலாம்; எயினர் வேடர், சிறுவர் மரத்தினிழலிற் பாண்டிலாடுவது கூறுகிறார்: நற். 3 உதியஞ் சேரல் செய்த போர்ச் சிறப்புக் கூறுகிறார்; நற். 113. இதிற் காதலி நோக்கம் இடைச்சுரத்து வந்து தடுப்பதாகக் கூறுவது நயமுடையது. தலைமகன் பிரிகின்றானைத் தடுத்துக் காதலிமேல் வீழ்ந்து முயங்கி வருந்துவது யாவரும் மயங்குந் தன்மையதாகும். நற். 308 மகளிர் பிறைதொழுது ஏத்தும் வழக்கு