xvii


19. இளவெயினனார்

    எயினனென்னும் பெயர்க் காரணத்தால் இவர் வேட்டுவ மரபினர் என்று தெரிகின்றது. நெய்தற்றிணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; இவர் கூறிய உள்ளுறை வியக்கத்தக்கது. இவர் பாடியது நற். 263 ஆம் செய்யுள்.

  
20. இளவேட்டனார்

    இளவேட்டனாரென்று அடைமொழி கொடாது கூறப்படுதலின் இவர் மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனாரின் வேறுபோலும். இவர் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; கூதிர்ப்பருவத்து நதிகளில் நீர் குறைவதை வெகு அழகாகக் கூறியுள்ளார்; நற். 157. நற். 221 ஆம் பாட்டு முல்லைத்திணை இவர் பாடியதாக ஏடுகளிற் காணப்பட்டமையின் இருந்தபடி அச்சிடப்பட்டது. இப்பொழுது அஃது இடைக்காடனார் பாடலென்று தெரிகின்றது. அதனையொழித்தால் இவர் பாடியவை நற்றிணையில் இரண்டு பாட்டு; (33, 157.)

  
21. இனிசந்த நாகனார்

    இவர் இனிய குரலொடு பாடவல்ல ராதல்பற்றி இவ்வடைமொழி கொடுக்கப்பட்டார் போலும். சந்தம்-குரல். இனிய சந்தம் இனி சந்தமென விகாரப்பட்டு நின்றது. இவர் பாலையைப் புனைந்து பாடியுள்ளார்; இவர் பாடிய நற்றாய் மனைமருட்சி கேட்போர் யாரையும் மருளப் பண்ணும். இவர் பாடியது நற். 66 ஆம் செய்யுள்.

  
22. உக்கிரப்பெருவழுதி

    இவன் பாண்டிய அரசன், தனக்குப் பகைவனாகிய வேங்கை மார்பனை வென்று அவனுக்குரிய கானப்பேரெயில் (காளையார் கோயில்) என்னும் ஊரைக் கைப்பற்றினவனாதலிற், கானப்பேரெயில் கடந்த பாண்டியன் உக்கிரப்பெருவழுதி யென்றுங் கூறப்படுவான்; புறம். 21 மாவெண்கோ என்னுஞ் சேரமானுடனும், இராசசூய யாகஞ்செய்த பெருநற் கிள்ளி என்னுஞ் சோழனுடனும் நட்புடையவன்; புறம் 367 கடைச்சங்கத்தை யாதாத்தவன்; அச் சங்கப்புலவரோடு ஒப்பப் பாடும் ஆற்றலுடையவன்; ஒளவையாராலும் ஆவூர்மூலங்கிழார் புகழ்ந்து பாடப்பெற்றவன்; புறம். 21, 367. உப்பூரிகுடிகிழார் மகனாவார் உருத்திரசன்மரைக் கொண்டு அகநானூறு தொகுப்பித்தோன் இவனே. இவன் குறிஞ்சியையும் மருதத்தையும் புனைந்து பாடியுள்ளான். இவனது சடையிலே திருக்குறள் அரங்கேற்றினதாக ஒரு கதை வழங்குகிறது. பல்லியடிக்குஞ் சகுனத்தைப் பன்றி ஆராயு மென்றிவன் கூறியது வியப்புடையதாகும்; நற். 98 ஆற்றாமை வாயிலாகப் புக்குக்கூடிய தலைமகன் நீக்கத்துத் தலைவி இரவு இவ்வாறு நிகழ்ந்ததென்று கூறியதாக இவன் கூறுவது யாவரையும் மகிழ்விக்கும்; அகம் 26 இவன் பாடியனவாக மேற்காட்டிய இரண்டு பாடல்களும்; திருவள்ளுவ மாலையிலொன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன

  
23. உரோடோகத்துக் கந்தரத்தனார்

    இவர் கந்தரத்தன் என்னுமியற்பெயருடையவர். உரோடோகம்- ஊர். இவ்வூர்ப்பெயர் ஒரோடோகமெனவும், ஒரோடகமெனவும்,