ஆம் பாடலால் விளங்கும். இன்னும் நன்றாக ஆராயுங்கால் இவர் உலக வழக்கமுற்றும் தெளிவாக அறிந்தவரென்று தோன்றுகின்றது. இவர் பாடியனவாக நற்றிணையில் ஆறு (12, 168, 279, 2", 305, 324) பாடல்களும் குறுந்தொகையில் நான்கும், அகத்தில் பன்னிரண்டும், புறத்தில் ஒன்றுமாக இருபத்து மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
43. கருவூர்க் கோசனார்
இவர் பாலைத்திணையிற் பயின்றவர்; தமது பாடலில், சோம்பலாய்ச் செயலற்றிருப்பவர்க்குக் கீர்த்தியும் இன்பமும் கொடைத்தன்மையுமாகிய இவை யில்லையாகுமென்று தெளிவாகக் கூறியுள்ளார். இவர் பாடியது நற், 214 ஆம் பாட்டு.
44. கழார்க் கீரனெயிற்றியார்
இவர் எயிற்றி யென்னும் இயற்பெயருடையார்; கீரன் என்பவரின் மனைவியார்; பெண்பாற் புலமையார்; சோழனாட்டு மாயூரத்தின் கீழ்பாலுள்ள கழார் என்னு மூரினர்; "வெல்போச்சோழர் கழாஅர்க் கொள்ளும்" நற். 281 வேட்டுவ மரபினர்; இவர் கணவன் கீரனாரென்பவர் சோழர்க்குப் படைத்துணையாகச் சென்று போர்முகத்துப் பொருது வெற்றிதருந்தன்மையார்; "காய்சின வேந்தன் பாசறை நீடி, நந்நோய் அறியா அறனி லாளர்" அகம். 2" ஆயினும் பிரிந்தாற் காமநோயாற் காதலி வருந்துவளென்பதுபற்றிப் பெரும்பாலும் காதலியை விட்டுப் பிரிபவரல்லர்; "கோடைத் தங்களும் பனிப்போள்" நற். 312 இங்ஙனம் பூவும் மணமும் போலப் பிரியா துறையுநாளில் ஒருகாற் போருக்குச் செல்ல வேண்டினமையிற் கீரனார் போர் பெரிதாயிற்றே வாடைக் காலத்தும் வருதற்கியலவாறு அங்கு வைகவேண்டியதாகுமே யென்று பலவாறு கவன்றார்; அவர் வருந்துவது கண்ட எயிற்றியார் "யான் பொறுத்திருக்கிறேன்; நீவிர் குறித்த பருவத்து வருவீராக" வென்று காதலனைத் தேற்றிவிடுத்து அவர் வருந்தியதைத் தொகுத்து வினைவயிற் செல்லுந் தலைமகன் நெஞ்சை நோக்கி வருந்தியதாகப் பாடிவைத்தனர்; நற். 312 பின்னர்ப் பெரும்போர் நடந்ததனாற் குறித்த பருவத்து வாராமல் கீரனார் பாசறைனின்றுவிடலும் எயிற்றியார் மழை பெய்கின்ற நடுயாமத்திற் குளிரின் கடுமைதாங்க இயலாது கண்ணுறக்கங் கொள்ளாது நம்மைக் கருதாத காதலர் அன்பிலரெனத் தோழியை நோக்கி வருந்துவாராயினார்; நற். 281 வருந்தும்போது கண்ணீர் வடிய அதனைக் "காதலர்ப் பிரிந்த கையறு மகளிர், நீர்வார் கண்ணிற் கருவிளை மலர" எனத் தாமே குறிப்பித்துளார்; அகம் 2" அங்ஙனம் கண்ணீர் வடிதலும் எம்மை வாடைக்காலத்தும் பிரிந்தவரைக் கருதி அழுதலால் எம் கண்கள் வெட்கமுடையன வல்லவென்று வெறுத்துக் கூறியும், (குறுந். 35) என்னெஞ்சு அவரைக் கருதிப் புண்பட்டதனால் அது வருந்தவேண்டுவதாயிருப்ப யாதொரு தொடர்புமில்லாத என் கண்கள் உறங்கிலவென்றும், (குறுந். 261) மழை முதலாயின அவர் நாட்டிலில்லையோ? இருந்தால் வந்திருப்பரே யென்றும், (குறுந். 330) வாடையை நோக்கி "நீயெனக்கே வந்தனையோ? இவ்வண்ணமே என் காதலரிருக்குமிடத்திற் சென்றால் அவர் என்னை நினைத்தாகிலு மிருப்பரே" யென்றும், (அகம். 163) துணையுடையோரை நோக்கி வாடை வந்துவிட்டதனால்; "எப்பொருள் பெறினும் பிரியள்மினோவெனச் செப்புவ ரளியர்"