இதனைக் "களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய புதியன் கால்வழித் தளையை வெட்டியரசிட்ட பரிசும்" (கலிங்கத்துப்பரணி) என்பதனானறிக. சேரன் கோக்ே்காதை மார்பனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்; (புறம். 48, 49) புறம். 48 இல் "கானலந் தொண்டியஃதெம்மூ" ரென்றதனால் இவர் மேலைக் கடற்கரையிலுள்ள தொண்டி நகருக் கணித்தாகிய ஊரினரென் றூகிக்கப்படுகின்றனர். மற்றும் மூவனென்பானைப் போரில் வென்று அவனது பல்லைப்பிடுங்கித் தொண்டிக்கோட்டை வாயிற் கதவிலே தைத்த சேரலன் கணைக்காலிரும் பொறையென அவனைச் சிறப்பித்துக் கூறுகின்றார். : (நற். 18 ) 1"கிடங்கில்" என்னும் ஊரைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். 2 "ஆழியிழைப்ப" என்ற பாட்டினால் தொண்டைமான் இளந்திரையனைப் பாராட்டிக் கூறியுள்ளார். பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் நாலாயிரப் பிரபந்தத்து இயற்பா முதற்றிருவந்தாதியில் வரும் பாடல்களுள் "பாலன் றனதுருவாய்" (69) எளிதினிரண்டடியும் (51) என்னும் வெண்பாக்களை எடுத்துக்காட்டி "இப்பொய்கையார் வாக்கினுள்" என்று கூறியவதனால் இவரே வைணவர்கள் துவாபரயுகத்திற் பிறந்தவராகக் கூறும் பொய்கை யாழ்வாரென் றறியப்படும். இவர் பாடியனவாக நற்றிணையில் 18 ஆம் பாடலொன்றும், புறத்தில் இரண்டும், யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாகக் காட்டப்படுஞ் சில பாடல்களும், வைணவரது நாலாயிரப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள இயற்பா முதற்றிரு வந்தாதியும், களவழி நாற்பது என்னும் நூலும் கிடைத்திருக்கின்றன.
135. போதனார்
இவர் செய்தி யாதும் விளங்கவில்லை. பாலையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடல் இந்நூலில் வரும் பாட்டின் பெருமைக்குக் கூறிய பன்னீரடியின்மிக்குப் பதின்மூன்றடி யுளதா யிராநின்றது. இவர் பாடியது நற், 110 ஆம் பாட்டு.
136. மடல்பாடிய மாதங்கீரனார்
இது பாடலால் விசேடித்து வந்த பெயர். இவர் கூறிய பாடல்களில் மடலேறுதலைப்பற்றிக் கூறாநிற்பர்.
| "மடலேறித் தெருவில் வந்து அவமானப்படுவதினும் |
| காமநோயா லிறந்துபோகேமோ" |
என்று இவர் கூறியது மிக்க நயமுடையதாயிருக்கும்; (நற். 377) இவர் குறுந்தொகையிற் கூறியதும் பெரும்பாலும் இதுவே கருத்துடையதாகும். குறிஞ்சித் திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 377 ஆம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
137. மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
இவர் சிறுகுடிகிழான் பண்ணனைப் பாடியவராதலால் (புறம். 388) அவனைப் பாடிய சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கோவூர்கிழார் இவர்களோடு ஒருகாலத்திருந்தவராவார்; ஒரோவிடத்துச் சேரலன் கொல்லிமலையையும் பாடியுள்ளார். இவர் குறிஞ்சியையும் பாலையையும் பெரும்பாலும் முல்லையையும் புனைந்து பாடினவர். இவர்
1. | மேலே 36 ஆம் பக்கம் பார்க்க. 2. | மேலே 36 ஆம் பக்கம் பார்க்க. | |