lx


"தேர்சேணீக்கி" என்னும் இவர் பாட்டின் (அகம். 380) கருத்து "நீ கண்டனையெனின்" என்ற திருக்கோவையில் (84) வந்துளது. பாண்டியன் நெடுஞ்செழியனது கூடனகரை ஏனையரசர் முற்றுகை செய்ததும் அவன் வெற்றியும் கூறியுள்ளார்; (நற். 39)ஒரு கொங்கையறுத்த திருமாவுண்ணி என்பாள் கதையைச் சுருக்கிக் கூறுகிறார்; அது கண்ணகியின் கதைபோலுமென்று கருதற்கிடனாகிறது; செவ்வையாக விளங்கவில்லை; (நற். 216) இவையன்றி இவர் ஒவ்வொரு நிலத்தினுங் கூறுங் கற்பனைகளும் உள்ளுறைகளும் வெளிப்படை யுவமங்களும் படிப்போர் மனத்தைக் கவர்வனவாகும். இவர் ஐந்நிலங்களினும் பலகாலுஞ் சென்று பழகி அவற்றினியல்பை கன்கறிந்து சிறிதும் மாறுபாடின்றித் திணைக்கேற்ற பொருள்களைப் புலப்படுத்திப் பாடுந்தன்மையராக விளங்கினவர். இதனை விரிவஞ்சி யான் விளங்கக் கூறவில்லை. இறையனார் களவியலுக்கு இவருமோருரை யெழுதினரென்று அந்நூலுரையால் விளங்கும். இவர் பாடியனவாக நற்றிணையில் பன்னிரண்டு (21, 39, 103, 1", 216, 283, 290, 302, 326, 341, 362, 392) பாடல்களும் குறுந்தொகையில் நான்கும் அகத்தில் இருபத்து மூன்றுமாக நாற்பத்திரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
152. மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்

    மருங்கூர்ப்பட்டினம் என்பது பாண்டிநாட்டிலுள்ள தோரூர். திருவாடானைத் தாலூகாவில் மருங்கூரென்ப தொன்று காணப்படுகிறது. சேந்தனின் புதல்வன் குமரனெனப்படுவார். முல்லைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியது நற். 289 ஆம் பாட்டு.

  
153. மருதம்பாடிய இளங்கடுங்கோ

    இவர் சேரர் மரபினர்; பாலை பாடிய பெருங்கடுங்கோவின் தம்பியென்று ஊகிக்கப்படுகின்றார். இவர் பெயர் பாடலால் விசேடித்து வந்தது. மருதத்திணையையே சிறப்பித்துப் பாடியதால் இவ்வடைமொழி பெற்றனர். அகுதை யென்பாளின் தந்தை சோழரது பருவூரைச் சிறப்பித்து ஆங்குச் சேரபாண்டியர் வந்து போர்புரிந்து தோற்ற கதையை விளக்கிக் கூறுகின்றார்; (அகம். 96) இவர் பாடலில் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனை வாயின் மறுப்பது பாராட்டற்பாலது; (நற். 50) இவர் மருதத்திணையையே பலபடியாலும் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 50 ஆம் பாடலொன்றும் அகத்தில் இரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

  
154. மலையனார்

    இவர் தமது பாடலில் மலைவளம் பலபடக்கூறி "மல்லற் றம்மவிம் மலைகெழு வெற்பு" எனக் கூறிய அருந்தொடர் மொழியையே தமக்குப் பெயராகப் பெற்றவர்; இயற்பெயர் புலப்படவில்லை. குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடலிலுள்ள இறைச்சிப்பொருள் மிக்க நயமுடையது. இவர் பாடியது நற். (") ஆம் பாட்டு.